கோப் அறிக்கை தொடர்பில்  விவாதத்தை ஜனவரி மாத்திலேயே நடத்த சந்தர்ப்பம் இருப்பதாக அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் எட்டாம் திகதி திட்டமிட்டபடி  கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்காலைகள் அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷமன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளதாவது,

கோப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அரஜூன் மகேந்திரம் சர்ச்சை தொடர்பில் விவாதிப்பதற்கு பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் சமர்பிப்பதற்கு முன்பாக தினமொன்றை வழங்குமாறு பொது எதிரணி அரசாங்கத்திடம் கேட்டிருந்தது.ஆனால் இச் சர்ச்சை தொடர்பிலான கோப் அறிக்கை தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே வரவ செலவு திட்டம் பாராளுமன்த்தில் சமர்ப்பிக்கப்படும் முன்பாக விவாதத்தை நடத்த முடியாது. எதிர்வரும் ஜனவரி மாத்திலேயே இது தொடர்பிலான விவாதத்தை நடத்தலாம் என்றும் அமைச்சர் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.