மாத்தறை - மஹானாம பாலத்திலிருந்து நில்வளா கங்கையில் தாய் ஒருவர் தனது குழந்தையுடன் பாய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 35 வயதுடைய தாயும் 8 வயதுடைய அவரது குழந்தையுமே இவ்வாறு கங்கையில் குதித்துள்ளனர்.

பொலிஸாரும் கடற்படையினரும் அவர்கள் இருவரையும் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.