இணையச்சேவை வழங்குநர்களை நாளை காலை முதல் குரல்வழி தொடர்பாடல்களிற்கு மாத்திரம் அனுமதியை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் கடிதம் போலியானது என இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவ்வாறான கட்டுப்பாடுகள் குறித்தோ அல்லது வேறு முடக்கல்கள் குறித்தோ திட்டமிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளைதேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குரல் தொடர்பாடல்களை மாத்திரம் அனுமதிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடும்தும் ஆணைக்குழுவினை கடிதத்தினை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது
குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தேசிய புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சனிக்கிழமை 9 ம் திகதி கொழும்பின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களிற்கு திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பாக காலிமுகத்திடலிற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன என தொழில்நுட்ப அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
வன்முறைக்கும்பல் உயிர்களிற்கும் உடமைகளிற்கும் சேதத்தை ஏற்படுத்த முயல்கின்றது எனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சமூகஊடக மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்புகளை நிலைமயை தீவிரப்படுத்துவதற்கும்இ பிழையான தகவல்களை வழங்குவதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக பாதுகாப்பு அமைச்சரும் தொழில்நுட்ப விவகாரங்களிற்கான அமைச்சருமான ஜனாதிபதி நாளை காலை ஆறு மணிமுதல் மறு அறிவித்தல் வரும்வரை குரல்வழி தொடர்பாடல்கள் மாத்தி;ரம் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.என அந்தக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு;ள்ளது















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM