புதிய வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு பொருத்தமான காப்புறுதித்தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் புத்தாக்கமான நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் விசேட உடன்படிக்கையொன்றை அண்மையில் ஏற்படுத்தியிருந்தது.
இதன் பிரகாரம் சங்கத்திலுள்ள அங்கத்தவர்கள் மத்தியில்ரூபவ் தமது காப்புறுதித்தீர்வுகளை பிரபல்யப்படுத்தும் வகையில் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
மனிதர்கள் எனும் வகையில் எவருக்கும் தமது வாழ்க்கையில் பல தேவைகள் இருக்கும். தற்கால உலகில் வாழ்க்கை முறைக்கமையரூபவ் இந்த தேவைகளில் கல்விரூபவ் முதலீடு மற்றும் சுகாதாரம்ரூபவ் மற்றும் பாதுகாப்பு போன்ற தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு இந்த தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள கைகொடுத்து உதவும் வகையில் தமது சேவைகளை யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கி வருகிறது.
இந்த ஒன்றிணைவின் பிரகாரம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு தமது குழந்தைகளின் கல்வித்தேவைகள்ரூபவ் முதலீட்டுத் தேவைகள் போன்று சுகாதார மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்காக பொருத்தமான தீர்வுகள் பலதை யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பிரபல்யம் பெற்ற தொழில் நிபுணர்கள் மத்தியில் காப்புறுதி சேவைகளை பிரபல்யப்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த செயற்பாட்டில் தனது நற்பெயரை மேலும் உயர்த்திக்கொள்வதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்திருந்த விசேடமான நிகழ்ச்சியாக இதை குறிப்பிட முடியும்.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் காப்புறுதியை பெற்றுள்ளவர்கள் மொத்தம் 12.5சதவீதமானவர்கள் மாத்திரமே. எவ்வாறாயினும்ரூபவ் தற்போது காணப்படும் சமூக நிலைகளில் ஆயுள் காப்புறுதியொன்றின் பெறுமதி முன்னொருபோதுமில்லாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக தென்பட ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கையர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இந்நாட்டின் மொத்த காப்புறுதித்துறையும் இணைந்து குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் விசேட செயற்திட்டமொன்றை முன்னெடுத்திருந்தன. இதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் தனது முழுப் பங்களிப்பை வழங்கியிருந்தது. இதில் மற்றுமொரு முதல் படியாக இலங்கையில் முன்னிலை வகிக்கும் தொழில் அமைப்புகள் மற்றும் சங்கங்களுடன் இணைந்து அந்த சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் அங்கத்தவர்களுக்கு காப்புறுதி தீர்வுகளை வழங்க நிறுவனம் நடவடிக்கைகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது.
நாட்டில் புகழ்பெற்றுத்திகழும் தொழில் நிபுணர்களை காப்புறுதி ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு ஊக்குவிப்பதன் மூலம் ஏனைய மக்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்வது இதன் நோக்கமாகும்.
1974ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்ரூபவ் இந்நாட்டின் முன்னணி மற்றும் வலிமைவாய்ந்த தொழிற்சங்கங்களில் ஒன்றாகும். நாட்டின் சட்டத்துறையின் நலன்புரிச் செயற்பாடுகள் தொடர்பில் இந்த சங்கம் பல தசாப்த காலமாக பங்களிப்பை வழங்கிய வண்ணமுள்ளது.
மூன்று தசாப்த காலமாக இலங்கையர்களின் மாறிவரும் வாழ்க்கை முறைக்கமைய மிகவும் பொருத்தமான காப்புறுதித்தீர்வுகளை பெற்றுக்கொடுத்துரூபவ் இந்நாட்டின் புகழ்பெற்ற காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கிறது. இதுவரையில்ரூபவ் நாட்டு மக்களுக்கு வெற்றிக்கான பாதையை காண்பிக்கும் நடவடிக்கையில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதுடன், முழு இலங்கையர்களுக்கும் மிகவும் ஒளிமயமான நாளையை தினத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது.
இந்த செயற்பாட்டின் வெற்றிகரத்தன்மை காரணமாகரூபவ் உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலதையும் நிறுவனம் தனதாக்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM