( எம்.எப்.எம்.பஸீர்)
நாளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரியும் பிரதமர் ரணில் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ள நிலையில், அது தொடர்பிலான பணிகளில் 9126 பாதுகாப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ், இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என 9126 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள ஆவணம் ஒன்றூடாக இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்ப்ட்டுள்ளன.
6296 பொலிஸாரும், 1830 இராணுவத்தினரும், 1000 சிவில் பாதுகாப்பு படையினரும் இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
12 மணி நேர சேவை வேலை நேரத்தைக் கொண்ட இரு குழுவினராக இவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கடமையில் ஈடுபடுத்தபப்டும் 6296 பொலிஸ் உத்தியோகத்தர்களில் 8 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 24 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், 86 உதவி பொலிஸ் அத்தியட்சர்கள், 392 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள், உப பொலிஸ் பரிசோதகர்கள், 5582 பொலிஸ் கான்ஸ்டபிள்கள், 200 பெண் பொலிஸ் காண்ஸ்டபிள்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தகக்து.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM