5 விக்கெட்களால் பங்களாதேஷை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்

Published By: Vishnu

09 Jul, 2022 | 06:47 AM
image

(என்.வீ.ஏ.)

பங்களாதேஷுக்கு எதிராக கயானா தேசிய விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற 3ஆவது சர்வதேச இருபது கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் நிக்கலஸ் பூரனின் அதிரடி ஆட்ட உதவியுடன் 5 விக்கெட்களால் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் கைப்பற்றியது.

முதலாவது போட்டி சீரற்ற கால நிலையால் கைவிடப்பட, 2 ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 35 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 166 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 18.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மேற்கிந்தியத் தீவுகள் 7ஆவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது களம் நுழைந்த பூரன், ஆரம்ப வீரர் கய்ல் மெயர்ஸுடன் இணைந்து 4ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினார்.

கய்ல் மேயர்ஸ் 38 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 55 ஓட்டங்களைக் குவித்தார்.

மறுபக்கத்தில் மேலும் 2 விக்கெட்கள் வீழ்ந்தபோதிலும் நிக்கலஸ் பூரன் தொடர்ந்து அதிரடியாக துடுப்பெடுத்தாடி அணியின வெற்றியை உறுதிசெய்தார்.

நிக்கலஸ் பூரன் 39 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 5 பவுண்டறிகளுடன்  ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களைக் குவித்தார்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் நசும் அஹ்மத்  44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

லிட்டன் தாஸ், அனாமுல் ஹக் (10 ஆகிய இருவரும் 27 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

துடுப்பாட்டவரிசையில் உயர்த்தப்பட்ட ஷக்கிப் அல் ஹசன் 5 ஓட்டங்களுடன் 2ஆவதாக ஆட்டமிழக்க 6ஆவது ஓவரில் பங்களாதேஷின் மொத்த எண்ணிக்கை 42 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால், லிட்டன் தாஸுடன் 3ஆவது விக்கெட்டில் ஜோடி செர்ந்த அபிப் ஹொசெய்ன் 44 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

லிட்டன் தாஸ் 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் 4ஆவது விக்கெட்டில் மஹ்முதுல்லாவுடன் மேலும் 49 ஓட்டங்களை ஹொசெய்ன் பகிர்ந்தார். மஹ்முதுல்லா 22 ஓட்டங்களைப் பெற்றார்.

மொத்த எண்ணிக்கை 150 ஓட்டங்களாக இருந்தபோது அபிப் ஹெசெய்ன் 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மொசாடெக் ஹொசெய்ன் 10 ஓட்டங்களுடனும் நூருள் ஹசன் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தார்.

மெற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் ஹேடன் வோல்ஷ் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீ.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரமாண்டமான...

2023-03-26 20:42:41
news-image

அங்குரார்ப்பண WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி...

2023-03-26 10:52:19
news-image

நியூஸிலாந்திடம் 198 ஓட்டங்களால் இலங்கை தோல்வி:...

2023-03-25 15:08:38
news-image

ஒருநாள் போட்டியிலும் சென் தோமஸ் அணியை...

2023-03-24 20:36:06
news-image

உலகக் கிண்ண கிரிக்கெட்டுக்கு நேரடி தகுதிபெறுவதே...

2023-03-24 17:06:36
news-image

WPL நீக்கல் போட்டியில் மும்பை -...

2023-03-24 17:51:29
news-image

பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட்; பிரிதொரு...

2023-03-24 13:46:54
news-image

ஆஸி. ஆரம்பத் துடுப்பாட்டத்திற்கு பஞ்சமில்லை :...

2023-03-24 09:21:18
news-image

டி.எஸ்.எஸ். - மஹாநாம - 17ஆவது...

2023-03-23 16:54:41
news-image

இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர்:...

2023-03-23 16:21:36
news-image

மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை வாங்க கத்தார்...

2023-03-23 12:08:50
news-image

முவர்ஸ் கழக வெற்றியில் அசத்திய யாழ்....

2023-03-23 09:32:37