சாய் பல்லவியின் ‘கார்கி’ பட ஓடியோ மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 5

08 Jul, 2022 | 05:36 PM
image

வேடி பவர் ஸ்டார் நடிகை சாய் பல்லவி கதையின் நாயகியாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கார்கி’ படத்தின் இசை மற்றும் முனனோட்டம் வெளியாகியிருக்கிறது. 

பிளாக்கி ஜெனி மற்றும் மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் ‘கார்கி’. இப்படத்தில் சாய் பல்லவி கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

இவருடன் நடிகர் காளி வெங்கட் அழுத்தமான வேடத்தில் நடித்திருககிறார் ஸ்ரீயந்தி மற்றும் ப்ரேம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைத்திருக்கிறார். 

ஜுலை 15 ஆம் திகதியன்று தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்  சென்னையிலுள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. 

இதில் பங்குபற்றி நடிகை சாய் பல்லவி பேசுகையில்,“ நாளாந்தம் நாம் சந்திக்கும் பிரச்சனையை படமாக கொடுத்திருக்கிறார்கள். பொதுவாக இயக்குநருக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால், இயக்குநர் கெளதம் எந்த வித அழுத்தமும் இல்லாமல் படபிடிப்புத்தளத்தில் இயல்பாகவே இருந்தார்.

படத்தில் பணியாற்றியாவர்கள் எம்முடைய திறமையை வெளிக்கொண்டு வருவதை விட, படத்திற்கு எது தேவையோ அதை செய்திருக்கிறார்கள். இந்த படத்தை சூர்யாவின் நிறுவனம் தான் வெளியிடுகிறது என்றவுடன் ஒரு நாள், எதிர்பாராத விதமாக சூர்யா சாரையும் ஜோதிகாவையும் சந்தித்தேன்.

அதன் போது எமக்கு பேச்சு வரவில்லை. ஏனெனில் நான் சூர்யா சாரின் மிகப்பெரிய விசிறி. அவரைப் பார்த்து உறைந்துப் போனேன் ”என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right