டீசல் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் போராட்டம் 

Published By: Digital Desk 5

08 Jul, 2022 | 12:23 PM
image

(க.கிஷாந்தன்)

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அட்டன் டிப்போவினால் அட்டனில் உள்ள தனியார் பஸ்களுக்கு கடந்த காலங்களில் டீசல் வழங்கப்பட்டு வந்தது.

எனினும், கடந்த 7 நாட்களாக அட்டன் டிப்போவினால் தனியார் பஸ்களுக்கு டீசல் எரிபொருளை வழங்கவில்லை. இதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அட்டன் பஸ் நிலையத்தில் இருந்து சேவையில் இயங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை மறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் (08) இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அட்டன் பஸ் நிலையத்திலிருந்து தினசரி நீண்ட மற்றும் குறுகிய தூர பிரதேசங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களின் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் (08) காலை அட்டன் பஸ் நிலையத்தில் இவ்வாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நேற்றைய தினம் சில தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்கப்பட்டதாகவும், ஏனையவர்களுக்கு இன்று டீசல் வழங்கப்படும் என தெரிவித்து டோக்கன் வழங்கப்பட்டதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

எனினும், இன்றைய தினம் டோக்கன் வழங்கப்பட்ட பஸ் உரிமையார்கள் டீசல் பெற்றுக் கொள்வதற்காக சென்ற பொழுது, டீசல் இல்லை முடிந்து விட்டது என அட்டன் டிப்போ அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்றைய தினம் இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும், கடந்த சில நாட்களாக எரிபொருள் கிடைக்காததால் பல தனியார் பஸ்கள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் உட்பட அத்தியவசிய சேவைகளில் ஈடுப்படுவோரும் பெரும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2025-12-17 01:32:44
news-image

யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர்...

2025-12-17 01:29:18
news-image

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதை விட, நீதிமன்றம்...

2025-12-17 01:03:01
news-image

அனர்த்தத்தின் பின்னரான நிவாரண வழங்கல் மற்றும்...

2025-12-17 00:59:49
news-image

'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியம் பற்றி மேல்மாகாண...

2025-12-17 00:52:57
news-image

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பொருளாதார நெருக்கடி...

2025-12-16 15:48:49
news-image

நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்த...

2025-12-16 16:45:04
news-image

குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள விசேட...

2025-12-16 22:09:31
news-image

அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் எமது குரலை...

2025-12-16 17:18:15
news-image

சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அழுத்தம் வழங்குங்கள்...

2025-12-16 17:03:11
news-image

அசோக ரன்வல தொடர்பில் கட்சி என்ற...

2025-12-16 17:17:30
news-image

இவ்வருடத்தில் கடந்த 9 மாதங்களில் 600...

2025-12-16 20:59:20