பொன்னியின் செல்வனின்' குந்தவை கதாபாத்திர தோற்றப் புகைப்படம் வெளியீடு

Published By: Digital Desk 5

08 Jul, 2022 | 03:43 PM
image

மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வெளியாகவிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை திரிஷாவின் தோற்றப் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.

கடந்த தலைமுறை போலவே இந்த இளம் இணைய தலைமுறையினரும் மின்னிதழில் விரும்பி வாசிக்கும் சரித்திர நாவலாக 'பொன்னியின் செல்வன்' திகழ்கிறது.

அமரத்துவம் பெற்ற இந்த நாவலின் வாசிப்பை மேம்படுத்தும் வகையில், தமிழ் திரை உலகின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் ஒன்றிணைந்து 'பொன்னியின் செல்வனை' இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இதில் முதல் பாகம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து பட குழுவினர் படத்தை பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

ஆதித்ய கரிகாலன், வந்திய தேவன், நந்தினி ஆகிய கதாபாத்திரங்களை தொடர்ந்து தற்போது 'இளைய பிராட்டியார்' குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திர தோற்ற புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

நிஜத்தில் முதிர் கன்னியான நடிகை திரிஷா, குந்தவை பிராட்டியாரின் இளவரசி தோற்றத்தில் ஆடை அணிகலன்கள் அணிந்து அட்டகாசமாக காட்சி தருகிறார்.

இது தொடர்பாக பார்வையாளர்களை குறிப்பாக இணையவாசிகளை உற்சாகப்படுத்தும் வகையில் வந்திய தேவனாக நடித்திருக்கும் கார்த்தி மற்றும் குந்தவையாக நடித்திருக்கும் திரிஷா இடையேயான இணைய உரையாடல்... ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே இன்று மாலை சென்னை வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் விழாவில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்