வெள்ளை வான் கடத்தல் என்றதொரு சம்பவமே கடந்த அரசாங்கத்தில் இருக்க வில்லை. புலம்பெயர் தமிழர்களும் சர்வதேச ஊடகங்களும் தான் இவ்வாறு வெள்ளை வான் கடத்தில் என கூறி போலி நாடகமாடியது என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, போரின் போதும் அதற்கு பின்னரும் கிடைக்கப்பெற்ற சீனாவின் உதவிகளை மறந்து விட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

பொரெல்லையில் அமைந்துள்ள ஸ்ரீ வஜிராஸ்ரம பௌத்த நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.