ஆர்ப்பாட்டம் நடாத்தலாம் - பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு ; சட்டத்தை மீறினால் பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை எனவும் எச்சரிக்கை 

Published By: Digital Desk 4

07 Jul, 2022 | 06:40 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

அரசியலமைப்பூடாக  உறுதி செய்யப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டு மற்றும்  அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமைகளை பொலிசார் மதிப்பதாக பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன  அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று விஷேட செய்தி ஒன்றினை வெளியிட்டு அவர் இதனை அறிவித்துள்ளார். எனினும், சட்டத்தை மீறி வன்முறையுடன், அரச தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வண்ணம் செயற்பட்டால் பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் எனவும் அவர் இதன்போது எச்சரித்தார்.

எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை நாடு முழுதும் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பின்னணியில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேரடியாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதன்போது பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளதாவது,

'அரசியலமைப்பு ஊடாக  உறுதி செய்யப்பட்டுள்ள, கருத்து மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தைப் போன்றே, அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தையும் இலங்கை பொலிஸார் மதிக்கின்றனர்.  அத்துடன் பொது மக்களின் அந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவற்றை விருத்தி செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.  இது தொடர்பில் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும், அனைத்து பொலிஸாருக்கும் அவ்வப்போது போதுமான தெளிவூட்டல்களை பொலிஸ் தலைமையகம் வழங்கியுள்ளது.

அரசியலமைப்பூடாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிக்கும் போது, அது ஏனையோரின் உரிமைகளை மீறாத வகையில் அமையும் வண்ணம் நடந்துகொள்ள வேண்டியது அனைவரதும் கடப்பாடாகும்.  அதே போல் நாட்டின் நடைமுறையில் உள்ள சட்டத்தை மீறி,  அமைதி நிலைமை இல்லாமல் போகும் வகையில்  வன்முறையுடன் நடந்துகொண்டு அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும், ஒன்று கூடல் மற்றும் கருத்து சுதந்திரத்தின் பேரிலான நடவடிக்கைகளை, அரசியலமைப்பூடாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பளிக்கப்பட்டுள்ள பொலிஸாரால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

தமது அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் போது,  அரச தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமல், சட்ட ரீதியான சேவையில் உள்ள அரச தனியார் ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமால் பொறுப்புடன் செயற்படுமாறு அனைத்து பொது மக்கள் செயற்பட்டாளர்கள், அரசியல்  தலைவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.'என பொலிஸ் மா அதிபர் கோரியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02