மத்திய தரைக்கடலை கடக்கும் போது விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து குழந்தை ஒன்றை இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
கடந்த வாரம் மத்திய தரைக்கடலை கடக்க முற்பட்ட கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 30 பேர் உயிரிழந்தார்கள்.
இந்த கப்பல் விபத்தில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த குழந்தையை டோகோ நாட்டைச் சேர்ந்த 17 வயதான இளைஞன் கடலில் குதித்து காப்பாற்றினான்.
அந்தசமயம் மீட்பு குழுவினர் குழந்தை, இளைஞன் மற்றம் மற்றொருவரை தமது கப்பலில் மீட்டனர்.
இந்நிலையில், முதலில் மூச்சுவிடாமல் இருந்த நான்கு மாதக் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்தனர். பின்னர் குழந்தையும் அவரது தாயும் மால்டாவிற்கு அனுப்பப்பட்டனர்.
நான் நன்றான நீந்த கூடியவன். அதனால் மக்களுக்கு உதவச் சென்றேன் என இளைஞன் குழந்தையை மீட்ட இளைஞன் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல் விபத்தில் மீட்க முடியாத கர்ப்பிணிப் பெண் மீட்புக் கப்பலில் உயிரிழந்தார்.
ஜியோ பேரண்ட்ஸ் மீட்பு கப்பல் விபத்தில் இருந்து 71 பேரை மீட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்கள் ஜியோ பேரன்ட்ஸ் கப்பலிலிருந்து தரையிறங்குவதற்கு கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அவர்கள் சனிக்கிழமையன்று இத்தாலிய நகரமான டரன்டோவில் இறங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM