தபால் சேவையின் வீழ்ச்சியை கருத்திற்கொண்டு அதனை மறுசீரமைக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. ஆகவே இலாப மீட்டுவதற்கு அப்பால் மக்கள் மத்தியில் குறித்த சேவை மீதான நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கு திணைக்கள ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்ற வேண்டுமென அஞ்சல் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலிம் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள விளையாட்டுத்தறை தலைமையகத்தில் இடம்பெற்ற தபால் சேவைக்குள் புதிதாக உள்வாங்கப்பட்ட ஊழியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.