மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தில், நந்தினி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திர தோற்றப் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் தமிழ் பேசும் குடும்பத்தின் நூலகமாக இருக்கும் வரவேற்பறையில் தவறாமல் இடம்பெற்றிருக்கும் இலக்கிய செறிவுமிக்க சரித்திர நாவல் 'பொன்னியின் செல்வன்'. சோழர் காலகட்டத்திய வரலாற்றை அக்காலகட்ட வாழ்வியலுடன் விவரிக்கும் சரித்திர பெட்டகமான பொன்னியின் செல்வன் நாவலை, பல தடைகளைக் கடந்து, மெட்ராஸ் டாக்கீஸ் - லைகா நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் இரண்டு பாகங்களாக தயாரித்திருக்கிறது.
இதில் முதல் பாகம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியன்று தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
பொன்னியின் செல்வன் நாவலை வாசிக்கும் போது கிடைத்த சுகானுபவம் சற்றும் குறையாமல், பார்வையாளர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் ஒன்றிணைந்து நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் டிஜிட்டலில் செல்லுலாய்ட் படைப்பாக செதுக்கி இருக்கிறார்கள்.
இதனை காண்பதற்காக ரசிகர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பட குழுவினர், படத்தை பற்றியும், படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரம் மற்றும் அதனை ஏற்று நடித்திருக்கும் நடிகர்களின் தோற்றத்தையும் புகைப்படமாக வெளியிட்டு வருகிறார்கள்.
ஆதித்ய கரிகாலன், வந்திய தேவன் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது நாவலின் திருப்புமுனைக்கு காரணமாகவும், சதிகாரியாகவும், சூழ்ச்சி செய்யும் கதாபாத்திரமுமான நந்தினி கதாபாத்திரத்தின் தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் அசலான பழுவூர் ராணியாக பாரம்பரிய ஆடை அணிகளுடன் தோன்றுவதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM