(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடங்களில் இளைஞர்களின் குரல் இருக்கவேண்டும். அதற்காக அந்த இடங்களில் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) மூன்று சட்டமூலங்களை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்
பாராளுமன்றம், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை 25வீதத்தால் அதிகரிக்கவேண்டும்.
ஏனெனில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடங்களில் இளைஞர்களின் குரல் இருக்கவேண்டும். அதற்காக அந்த இடங்களில் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும்.
அத்துடன் தற்பபோது இளைஞர்களுக்கு 5வீத ஒதுக்கீடே வழங்கப்படுகின்றது. இது எந்தவகையிலும் போதுமானத இல்லை. அதனால்தான் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை 25வீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற இந்த பிரேரணையை முன்வைக்கின்றேன்.
ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு இளைஞர்களுக்கு ஏற்படுத்தவேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்கும் படித்த இளைஞர்களின் நம்பிக்கை இழப்பை மாற்ற இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவேண்டும் என்றார்.
இதன்போது அவர் 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம், 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம், 1946ஆம் ஆண்டின் 53ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் என்பவற்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM