புகையிரத நிலைய பாதுகாப்புக்கு இராணுவத்தை வழங்குமாறு கோரிக்கை

Published By: Vishnu

06 Jul, 2022 | 08:25 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

புகையிர நிலைய பாதுகாப்புக்கு இராணுவத்தை வழங்குமாறு புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பஸ் சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், தனிப்பட்ட வாகனங்களில் பயணிப்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இவர்கள் அனைவருமே ரயில் சேவை‍யை நம்பியே தமது போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்

இவ்வாறான சூழ்நிலையில் புகையிரத கட்டுப்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மக்கள் பலரும் பாரிய சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர்.

இது குறித்து  ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன  கூறுகையில்,  

புகையிரத கட்டுப்பாட்டாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக  நேற்று க்காலை புகையிரத போக்குவரத்து தடைப்பட்டது.  மேலும், திட்டமிடப்பட்ட ரயில்களில் பாதியளவு ரயில்கள் இயங்கவில்லை என அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை,  புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன கூறுகையில், 

"குறைந்த எண்ணிக்கையிலான புகையிரதங்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் நிலையங்களுக்கு முன்னாள் கலவரத்தில் ஈடுபட்ட சம்பவங்கள் பதிவாகின.

இதனால் அச்சமடைந்த ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் கடமைகளை மேற்கொள்ள தயங்கி வருவதுடன், தமக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுள்ளனர்"  என்றார்.

கொழும்பு கோட்டை, மருதானை, ராகம, கொள்ளுப்பிட்டி மற்றும் பாணந்துறை ஆகிய புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் தமது கடமைகளை விட்டுச் சென்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-15 06:15:52
news-image

துப்பாக்கிச் சூடு நடந்ததாக பரவிய தகவல்...

2026-09-15 06:13:56
news-image

மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு...

2026-09-15 06:09:07
news-image

உயர்தர பாடத்தொகுதியில் சட்டம், சமூக நல்லிணக்கம் ...

2026-09-15 06:02:52
news-image

மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விதிக்கப்பட்ட...

2026-09-15 06:00:26
news-image

தித்வா அனர்த்த நட்டஈட்டு வேலைத்திட்டம் வெற்றிகரமாக...

2026-09-15 05:57:44
news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச...

2026-09-15 05:47:55
news-image

அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது...

2026-09-15 04:55:46
news-image

முல்லைத்தீவில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58 ஹெக்டேயர்...

2026-09-15 00:03:48
news-image

வலி.வடக்கில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: மீள...

2026-09-15 00:00:04
news-image

மாகாணசபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி...

2026-09-14 12:54:25
news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு:...

2026-09-14 16:55:48