(எம்.மனோசித்ரா)
எரிபொருள் இறக்குமதிக்கான கடன் திட்ட ஒத்துழைப்புக்களை வழங்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டீனிடம் கோரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , எரோ புளொட் விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலின் போதே அவர் இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். தனக்கு ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் தொடர்பில் டுவிட்டர் பதிவிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,
'ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் மிகவும் பயனுள்ள தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது. கடந்த காலங்களில் சவால்களை எதிர்கொள்வதற்கு அவரது அரசாங்கம் வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், தற்போதைய பொருளாதார சவால்களை தோற்கடிக்க இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய கடன்திட்ட ஒத்துழைப்பினைக் கோரினேன்.
மேலும், எரோ புளொட் விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தேன். சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் நட்பை வலுப்படுத்துவதில் மிக முக்கியமானது என்பதை நாங்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டோம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM