புதுவித திருமணத்தால் பிரபலமான கரடி (படங்கள் இணைப்பு)

Published By: Raam

03 Nov, 2016 | 02:56 PM
image

திருமண பந்தத்தில் இணைவதற்கு பலர் சாகசம் செய்வது வழக்கம். அதில் ஆகாயத்தில் பறந்து திருமணம் செய்வது, கடலுக்கு அடியில் திருமணம் செய்வது என புதுப்புது வழிகளில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உலகம் முழுவதும் தற்போது அதிகரித்து வருகின்றது.

அவ்வரிசையில்  ரஷியாவின் மாஸ்கோ நகரத்தை சேர்ந்த டெனிஸ், நிலியா ஜோடி வித்தியாசமான முறையில் திருமணம் செய்து இணைந்துள்ளனர்.

அதன்படி ஸ்டீபன் என்ற கரடியை தங்கள் திருமணத்திற்கு அழைத்து அதன் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

சுற்றிலும் மரங்கள், புல்வெளி, பழங்கள் என இயற்கையான சூழலுக்கு நடுவில் பூங்கொத்துகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட திருமணம் தோரணத்தின் நடுவில் ஸ்டீபனை சாட்சியாக வைத்து டெனிஸ், நிலியா மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்கள் இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

3 மாதங்களில் தனது தாயை இழந்து காட்டில் பரிதவித்த ஸ்டீபனை ரஷியாவைச் சேர்ந்த ஸ்வெட்லானா-யூரி தம்பதியர் தத்தெடுத்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்