(இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்)
உலக சந்தையில் எரிபொருளின் விலை 10 சதவீதத்தால் குறைவடைந்துள்ள நிலையில் வருகை தரவுள்ள எரிபொருள் கப்பலுக்கு மேலதிகமாக 700 மில்லியன் ரூபாவை செலுத்தவுள்ளமை எந்தளவிற்கு நியாயமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சபையில் கேள்வியெழுப்பினார்.
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் புதன்கிழமை (06) கூடிய போது எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சர்வதேச நாணயத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரச கடன் மறுசீரமைக்கப்பட்டு,நாட்டின் கடன் நிலைபேறான தன்மையில் காணப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளோம்.
எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோக கட்டமைப்பில் காணப்படும் சிக்கல் நிலைமை நாட்டின் பிரதான பிரச்சினையாக தீவிரமடைந்துள்ளது.எரிவாயு விநியோக கட்டமைப்பு தொடர்பில் ஆராய லிட்ரோ நிறுவனத்தினர்.
நேற்று முன்தினம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டார்கள். எரிவாயு விநியோக த்தில் பல அடிப்படை சிக்கல் காணப்படுவதை கோப் குழுவில் அறிய முடிந்தது.
எரிவாயு கட்டமைப்பில் காணப்படும் சிக்கல் நிலை குறித்து கோப் குழு அதிக அவதானம் செலுத்தியுள்ளது.குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை செயற்படுத்த உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.எரிபொருள் வரிசை பல கிலோமீற்றர் தூரத்திற்கு நீண்டு செல்கிறது.
உலக சந்தையில் எரிபொருளின் விலை 10 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. 115 டொலராக காணப்பட்ட ஒரு எரிபொருள் தாங்கியின் விலை தற்போது 99 டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் 700 மில்லியன் ரூபாவை எரிபொருள் கப்பலுக்கு மேலதிகமாக செலுத்துவது எந்தளவிற்கு நியாயமானது என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM