ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்கான உரிமை மக்களுக்கு உண்டு - பேராயர்

Published By: Digital Desk 3

06 Jul, 2022 | 03:34 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஜனாதிபதிக்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்கான சுதந்திரம் மற்றும் உரிமை பொது மக்களுக்கு உண்டு. 

எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பொது மக்கள் தங்களுக்குள்ள எல்லையை மீறாமல்,  நடந்துகொள்வது முக்கியமான விடமாகும் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். 

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் ம மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

" இந்நாட்டை நேசிக்கும் பிரஜைகள் என்ற வகையில், தங்களது பொறுப்புக்களை செய்யுமாறு நாம் எமது மக்களுக்கு கூறியுள்ளோம். அவரவர் மனசாட்சியின்படி, செயற்படுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம். 

காலி முகத்திடலில் நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென தங்களது மனசாட்சி கூறுவதாக இருந்தால், அது அவர்களது தீர்மானமாகும். அத்துடன், இந்த போராட்டத்தில் ஈடுபடும்போது, எந்த விதத்திலும், எவருக்கும் இம்சைகள் கொடுக்காது செயற்பட வேண்டியது முக்கியமான விடயமாகும்.

பொது மக்கள் அராசங்கத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவதன் சுதந்திரம் இந்நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும்.  இந்நாட்டில் மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய தேவை இருப்பின், அந்த எதிர்ப்பை வெளிக்காட்டுவது நியாமான விடயமாகவே நான் காண்கிறேன். 

மேலும், இம்மாதிரியான நடவடிக்கைகளின்போது, பொது மக்கள் தங்களது எல்லையை மீறாமல் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை...

2024-09-07 18:28:56
news-image

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று தமிழர்களின்...

2024-09-07 22:59:45
news-image

அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் ...

2024-09-07 18:22:22
news-image

மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி...

2024-09-07 22:26:01
news-image

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்

2024-09-07 14:22:14
news-image

கடந்து வந்த பாதையை ஜனாதிபதி மறந்துவிட்டார்...

2024-09-07 18:17:06
news-image

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்...

2024-09-07 17:30:15
news-image

கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட...

2024-09-07 18:12:30
news-image

சிலாபம் - புத்தளம் வீதியில் விபத்து;...

2024-09-07 18:25:56
news-image

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில்,...

2024-09-07 21:53:36
news-image

கல்முனையில் யானையால் தாக்கப்பட்டு யாசகர் பலி

2024-09-07 17:57:54
news-image

பொத்துவில் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2024-09-07 17:35:27