வவுனியாவில் புதையல் தேடும் முயற்சியில் ஈடுபட்ட 9 பேர் கைது - ஸ்கேனர், வேன் மீட்பு

Published By: Digital Desk 4

06 Jul, 2022 | 02:15 PM
image

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் புதையல் தேடும் முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று (05.07) மாலை 9 பேரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குறித்த நடவடிக்கைக்கு பயன்படுத்திய ஸ்கேனர் இயந்திரம் மற்றும் வேன் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பலர் நிற்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினர் அவ்விடத்திற்கு சென்றிருந்தனர். இதன் போது புதையல் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 9 நபர்களை பொலிஸார் கைது செய்ததுடன், போக்குவரத்திற்கு பயன்படுத்திய வேன் மற்றும் புதையல் தேடும் ஸ்கேனர் இயந்திரம் ஆகியவற்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நாகர் இலுப்பைக்குளம் பகுதியினை சேர்ந்த 26 வயதுடைய நபர், மூன்றுமுறிப்பு பகுதியினை சேர்ந்த 50 வயதுடைய நபர், மகர பகுதியினை சேர்ந்த  19, 31, 37, 35, 46, 49, 38 ஆகிய வயதுகளையுடைய 9 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் மற்றும் ஸ்கேனர் இயந்திரம், வாகனம் ஆகியவற்றினையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2...

2026-07-16 16:52:03
news-image

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை...

2026-07-16 16:48:26
news-image

"நேர்மைமிக்க கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா"...

2026-07-16 16:36:18
news-image

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்...

2026-07-16 16:18:53
news-image

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு...

2026-07-16 15:50:29
news-image

ஜனாதிபதி தலைமையில் துறைமுகங்கள் மற்றும் சிவில்...

2026-07-16 15:33:42
news-image

83 சதவீத சிறைச்சாலை உயர் பதவிகள்...

2026-07-16 15:22:32
news-image

நோர்வூட் தேயிலை தோட்டத்தில் மாணிக்கக் கல்...

2026-07-16 14:50:48
news-image

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணைகள் வெறும் ஊடக...

2026-07-16 14:41:36
news-image

ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம் மீண்டும் திறப்பு

2026-07-16 14:45:43
news-image

புதிய கடற்படைத் தளபதி பிரதமரைச் சந்தித்தார்!

2026-07-16 14:01:41
news-image

யோஷித ராஜபக்‌ஷ, பாட்டி டெய்ஸிக்கு எதிரான...

2026-07-16 13:31:21