கற்பு என்பது...

Published By: Nanthini

06 Jul, 2022 | 02:54 PM
image

கேள்வி
நான் ஒரு பெண். எனக்கு வயது 19. நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவரும்தான். எனது 9 வயதில் என் மாமா என்னைக் கெடுத்துவிட்டார். அப்போது அது பற்றி எனக்குத் தெரியாது. 14 வயதில் பூப்படைந்த பின்தான் எனது பிரச்சினை எனக்கே தெரியவந்தது. நான் இனி திருமணம் செய்யும்போது எனது கற்பு பறிபோயிருக்குமா? எனக்கு இரத்தக்கறை படாதா? நான் கெட்ட பெண்ணா? எனது காதலர் கற்பு பற்றி அடிக்கடி பேசுவார். அப்போதெல்லாம் எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கும். தயவு செய்து பதில் சொல்லுங்கள்.   (பெயர் குறிப்பிடாத வாசகி) 

                      

பதில்
பதறாதீர்கள். கற்பு என்பது கன்னித்திரையில் இல்லை. அது மனம் சம்பந்தப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். சிறு வயதில் உங்களுக்கு நடந்தது ஒரு விபத்து. அதற்கு நீங்கள் எவ்விதத்திலும் காரணம் இல்லை. எனவே, நீங்கள் கெட்டவரோ, கெட்டுப்போனவரோ இல்லை.

அடுத்து, ஒன்பது வயதில் நடந்த அந்தச் சம்பவத்தால் நீங்கள் எண்ணும் அளவுக்கு பிரச்சினைகள் ஒன்றும் வராது. ஏனெனில், அந்த வயதில் முழுமையான உறவில் உங்களை யாரும் ஈடுபடுத்தியிருக்க முடியாது. எனவே, கன்னிச்சவ்வு பாதிப்படைந்திருப்பதற்கு வாய்ப்புகள் ஏதும் இல்லை.

அடுத்து, முதலிரவில், முதலுறவில் இரத்தம் வருவதை வைத்து அவளது கற்பைத் தீர்மானிப்பது முட்டாள்தனம். அப்படியே இரத்தம் கசிந்தாலும், அவளது மனதில் வேறு ஆணை நினைத்திருந்தால் அவள் கற்புடையவள் என்று சொல்லிவிட முடியுமா? இதைப் பற்றி எண்ணிக் கலங்கவேண்டாம். உங்கள் திருமண வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் வராது. பயப்படாதீர்கள்.

ஆனால்… இது கல்விப் பருவம். இந்தப் பருவத்தில் காதல் கொள்வது சகஜமாகிவிட்டாலும், அது மிகத் தவறானது. எத்தனை இளம் பெண்கள் காதல் என்ற பெயரில் தமது வாழ்க்கையைச் சிதைத்துக்கொள்கிறார்கள் என்று. ஆகையால் தயவு செய்து உங்கள் காதலை இன்னும் சில வருடங்களுக்கு ஒத்திப்போடுங்கள். உங்கள் காதல் உண்மையானதாக இருந்தால், அந்த இடைவெளி உங்கள் காதலை உறுதிப்படுத்த உதவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சருமத்தை மென்மையாக்கும் இயற்கை மொய்ஸ்சுரைசர்

2023-03-17 14:59:33
news-image

எந்த காலமானாலும் சரி எந்த யுகமானாலும்...

2023-03-01 14:36:43
news-image

அழகை அதிகரிக்கும் எலுமிச்சைத் தோல்

2023-02-10 13:04:52
news-image

உங்கள் சருமத்துக்கேற்ற பவுண்டேஷனை தெரிவு செய்யும்...

2023-02-03 17:21:13
news-image

'வாசனை திரவியங்கள்'- சில சுவாரசியமான தகவல்கள்

2023-02-02 17:21:04
news-image

இளம் பெண்கள் ஏன் தாவணி அணிய...

2023-02-01 16:08:50
news-image

பெண்களுக்கு வாதத்தால் வரும் மார்பக வலி

2023-01-28 12:07:36
news-image

முக சுருக்கங்களை நீக்கும் ஃபேஸ் பெக்!

2023-01-27 16:04:55
news-image

அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு ஆலோசனைகள்

2023-01-26 17:25:55
news-image

சருமத்துக்கேற்ற ஃபவுண்டேஷனை தேர்வு செய்வது எப்படி?

2023-01-26 12:40:30
news-image

மாதாந்திர வலி

2023-01-25 17:23:18
news-image

முக அழகு அதிகரிக்கும் புருவங்கள்

2023-01-25 12:51:53