சுற்றுலாத்துறைசார் தொழிலாளர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அவசர தொலைபேசி இலக்கம் - ஹரின் 

Published By: Vishnu

06 Jul, 2022 | 09:20 PM
image

(எம்.மனோசித்ரா)

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்துள்ள சாரதிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இலக்கத்திற்கு அழைத்து சுற்றுலாத்துறைசார் தொழிலாளர்கள் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் 6 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்துள்ள சாரதிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக அவசர தொலைபேசி இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன் ஊடாக அவர்கள் தமக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு நாளாந்தம் சுமார் 1000 வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர சுற்றுலாத்துறை அமைச்சினால் வழங்கப்படும் கடிதத்தைக் கொண்டும் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும். சில சுற்றுலாத்துறைசார் ஊழியர்கள் தமது தொழில் அடையாள அட்டையை மாத்திரம் காண்பித்து எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முற்படுகின்றனர். இவ்வாறானவர்கள் சுற்றுலா அமைச்சின் கடிதத்தினையும் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

எதிர்வரும் 10 - 12 ஆம் திகதிகளுக்குள் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு கிட்டும் என்று எண்ணுகின்றோம். அதன் பின்னர் சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அத்தோடு ஆகஸ்ட் மாதத்தில் நல்லூர் ஆலய உற்சவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையால் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலுள்ள பெருமளவான பக்தர்கள் வரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் மாதம் சுற்றுலா பருவ காலம் என்பதால் குறித்த காலப்பகுதியிலும் அதிகளவான சுற்றுலாப்பயணிகளை வரவழைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் சுற்றுலாப்பயணிகளின் வருகை 8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இதனை மேலும் அதிகரிப்பதே எமது இலக்காகும்.

இலங்கைக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாடுகளின் தூதுவர்களை சந்தித்து , அதனை நீக்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளேன்.

அத்தோடு சுற்றுலாத்துறையை இடையூறின்றி முன்னெடுப்பதற்கு விமானங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27