இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னவுக்கு சில வாரங்களுக்கு ஓய்வளிக்கப்பட வேண்டுமென இல்ஙகை ஏ அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன தெரிவித்துள்ளார்.

திரிமான்ன சிறந்த துடுப்பாட்ட வீரர். எனினும் அவரது  துடுப்பாட்டம் கடந்த சில நாட்களாக  சற்று சரிவை சந்தித்துள்ளது. இதனால் அவருக்கு சில வாரங்களுக்கு ஓய்வளித்தால் மீண்டும் அவர் எழுச்சியடைய வாய்ப்புள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கெதிராக விளையாடிய நான்கு நாள் டெஸ்ட் போட்டியில், ஆறு இன்னிங்ஸ்கள் விளையாடிய திரிமான்னவின்  9.83 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறான மோசமான துடுப்பாட்டத்தால்  அவருக்கு அவுஸ்திரேலிய அணிக்கெதிரான தொடருக்கு வாய்ப்பளிக்கப்படாதது மாத்திரமின்றி சிம்பாப்வே அணிக்கெதிரான தொடருக்கும் இவர் அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லையென்து குறிப்பிடத்தக்கது.