வெற்றியே சிறந்த பதில்

Published By: Nanthini

06 Jul, 2022 | 11:53 AM
image

(பிருந்தா மகேந்திரன்)

ரு ஊரில் பெரிய தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவர் அந்தத் தொழி­லில் நிறைய சாதனைகள் செய்திருந்த­தால், அந்த ஊரிலுள்ள அமைப்பொன்று அவருக்கு பரிசு கொடுக்கலாமென முடிவு செய்தது.

அதற்கு வரவழைக்கப்பட்ட அவருக்கு பரிசு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு சிறிது நேரம் உரையாற்றிய அவர், அரங்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து, “உங்களுக்கு என்னிடம் ஏதேனும் கேள்வி இருந்தால் கேட்கலாம்” என்றார்.

ஒருவர் எழுந்து, “உங்கள் வெற்றிக்கு பின்னால் யார் அல்லது எது இருந்தது?” என்று கேட்டார்.

“உங்களைப் போல் சீப்பான கோட் சூட் போட்டிருக்கவங்களுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது” என்றார் அந்த தொழிலதிபர்.

இதை கேட்ட அந்த நபருக்கு, கண்கள் கலங்கியது. ஏன் இந்த கேள்வியைக் கேட்டோம் என்பதைப் போலாகிவிட்டது.

உடனே அவர் தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார். அவருக்கு மிகவும் அவமானமாக இருந்தது. நிறைய பேருக்கு இவரை ஒரு பெரிய மனுஷன் என்று மதித்து கேள்வி கேட்டால், இப்படி ஒரு பதில் சொல்கிறார் என்ற எண்ணம் தோன்றியது.

மீண்டும், “யாருக்கேனும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்” என்றார் தொழில­திபர்.

யாரும் கேள்வி கேட்க தயாராக இல்லாத­பட்சத்தில் ஒரே ஒரு கை மட்டும் உயர்ந்தது. அந்த நபர், “உங்கள் வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?” என்றார்.

தொழிலதிபர் அந்த நபரைப் பார்க்கை­யில், அவர் மிகச் சாதாரணமான சட்டை­யும் சாதாரண பேன்ட்டும் தான் அணிந்தி­ருந்­தார்.

ஆனாலும் அந்த நபரை மேடைக்கு அழைத்து அவரை கட்டிப்பிடித்து, “நீ நிச்­சயமாக ஒரு நாள் பெரிய ஆளாக வரு­வாய்” என்றார்.

எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். ஒரே கேள்வியைத் தானே இருவரும் கேட்டார்­கள். ஒருவரை அவமானப்படுத்தி­விட்டு இன்னொருவரை பாராட்டுகிறாரே என்று யோசிக்கையில், அந்த தொழிலதிபர் பேச ஆரம்பித்தார்.

“இன்று நானொரு தொழிலதிபராக இருக்கிறேன். எல்லோரும் என்னைப் பார்த்து பாராட்டும் நிலையில் இருக்கிறேன். ஆனால், இந்த இடத்துக்கு நான் சுலபமாக வந்துவிடவில்லை.

ஒரு காலத்தில் நான் ஒரு கடையில் மூட்டை தூக்கும் பையனாக இருந்தேன். அப்போது என்னுடைய தோற்றத்தையும் உடையையும் பார்த்து நிறைய பேர் கிண்டல் செய்திருக்கிறார்கள்.

அதன்பின்னர் கொஞ்சமாக பணம் சேர்த்து மலிகைக் கடையொன்றை நடத்தி­னேன். அதில் எல்லா வேலைகளையும் நானே செய்தேன்.

அதன்பின்னர் கொஞ்சம் வளர்ந்து சுப்பர் மார்க்கெட் ஒன்றை ஆரம்பித்தேன். அதன் பின்னர் என்னை நிறைய கூட்டங்களுக்கு அழைத்தார்கள்.

அதன்பிறகு நிறைய கஷ்டங்கள் பட்டு ஒரு தொழிலதிபர் ஆனேன். தொழிலதிபர் ஆனதன் பின் இன்னும் நிறைய சங்­கங்­கள், கூட்டங்கள் இப்படியெல்லாம் நடக்கும்.

அதற்கெல்லாம் நான் போகும்போது ஒரு அளவுக்கு என்னுடைய உடை நேர்த்தி­யாக இருந்தாலும் என்னுடைய பேச்சை என்னால் மாற்ற முடியவில்லை. எனக்கு பெரிதாக ஆங்கிலம் தெரியாது. மற்றவர்­களுடன் பேச எனக்கு வெட்கமாக இருந்தாலும் நான் தைரியமாக பேசுவேன். அவர்கள் என்னிடம் நன்றாக பேசிவிட்டு பின்னாடி சென்று கிண்டல் செய்வார்கள்.

பல இடங்களில் என்னை ஏளனமாக பார்த்து, எனது நிறத்தை, உருவத்தை வைத்து எடை போட்டிருக்கிறார்கள். இவையெல்லாவற்றையும் மீறித்தான் நான் என்னுடைய உழைப்பில் உறுதியாக இருந்து ஒரு பெரிய நிலைமைக்கு வந்திருக்கேன்.

அதனால் எனது வெற்றிக்கு பின்னால் இருப்பது நான் பட்ட அவமானங்கள் மட்டுமே.

நீங்களும் வெற்றி பெற­வேண்டு­மானால், எந்தளவுக்கு உழைப்பு இருக்­கனுமோ எந்தள­வுக்கு திறமை­யிருக்க­னுமோ அதைவிட இரண்டு மடங்கு அவமானத்தை தாங்கும் மனப்­பக்குவம் இருக்கணும். அந்த மனப்­பக்குவம் இருந்தால்தான் வெற்றிய­டைய முடியும்” என்றார்.

ஒரு சிறிய சோதனைக்காகவே முதலில் எழுந்த நபரை அவமானப்படுத்தினார். அந்த நபர் அவமானப்பட்டதுமே வெட்கப்­பட்டு அமர்ந்துவிட்டார். ஒருவர் அவமா­னப்­படுவதை கண்முன்னே பார்த்த பிற­கும் இன்னொருவர் எழுந்திருந்து கேள்வி கேட்டார் இல்லையா? அந்த துணிச்­சல்­தான் வெற்றி பெறவேண்டும் என நினைக்­கும் ஒவ்வொருத்தருக்குமே தேவை.

நீங்களும் பல இடங்களில் அவமா­னப்­பட்டிருக்கலாம். பல ஏளனமான பார்­வைக்­கும் பேச்சுக்கும் ஆளாகி­யிருக்க­லாம். உங்களுடைய வசதியையோ தோற்­றத்­தையோ காரணம் காட்டி நிறைய பேரினால் ஒதுக்கப்பட்டிருக்கலாம் ஆனால், அத்தனை அவமானங்களுக்கும் பதில் உங்களது வெற்றி மட்டும்தான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்