இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால கூட்டாண்மையை கட்டியெழுப்புவதற்கும், இமயமலை தேசம் சுகாதார மற்றும் கல்வித் துறைகளில் அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குமாக நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் 17 பாடசாலை பஸ்களை இந்தியா பரிசாக வழங்கியது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய தூதுவர் நவீன் ஸ்ரீவஸ்தவா, நேபாளத்தின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் தேவேந்திர பவுடல் முன்னிலையில் வாகனங்களின் சாவியை கையளித்தார்.
75 ஆம்புலன்ஸ்கள் பரிசாக வழங்கப்படுவது இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் கல்வியில் அதன் உள்கட்டமைப்பை வலுப்படுத்த நேபாள அரசாங்கத்தின் முயற்சிகளை மேம்படுத்துவதற்காக நேபாள-இந்தியா மேம்பாட்டுக் கூட்டுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தின் நீண்டகால பாரம்பரியங்களில் இந்த முயற்சியும் ஒன்றாகும்.
2021 ஆம் ஆண்டில், கொவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் காத்மாண்டுவுக்கு உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்ட 39 ஆம்புலன்ஸ்களை இந்தியா நேபாளத்திற்கு பரிசளித்தது.
இதேபோல், 2020 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாளை முன்னிட்டு நேபாளத்திற்கு இந்தியா 41 ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆறு பாடசாலை பஸ்களை பரிசாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM