மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் 'பொன்னியின் செல்வன்' எனும் சரித்திர காவியத்தில் இடம்பெற்ற வந்திய தேவன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் கார்த்தியின் கதாபாத்திரத் தோற்றப் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
தமிழ் இலக்கியத்தில் சரித்திர நாவல்களுக்கென தனி இடம் உண்டு. அதில் அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' எனும் காவியத்திற்கு பிரத்யேக இடமுண்டு. இன்றும் வாசிக்கும் பழக்கத்தை கொண்ட புதிய இளம் தலைமுறைகளிடத்தில் தனித்துவமான ஈர்ப்பைக் கொண்டிருக்கும் நாவல் 'பொன்னியின் செல்வன்'.
சோழ சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னர்களின் சதியும், சூழ்ச்சியும் கொண்ட வாழ்வியல் சரித்திரத்தை பறைசாற்றும் இந்த நாவல், பல தடைகளுக்குப் பிறகு இந்தியாவின் முத்திரை பதித்த இயக்குவர் மணிரத்தினம் மற்றும் பிரம்மாண்ட படங்களை தயாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் லைகா நிறுவனம் இரண்டும் கூட்டணி அமைத்து 'பொன்னியின் செல்வன்' நாவலை அதே பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியன்று 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரத்தையும், அதில் நடித்திருக்கும் நடிகர்களின் தோற்றத்தையும் புகைப்படங்களாக படக்குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நேற்று ஆதித்ய கரிகாலனாக சீயான் விக்ரம் அவர்களின் தோற்றம் வெளியிடப்பட்டது. இன்று 'பொன்னியின் செல்வன்' நாவலில் கதை நாயகர்களில் ஒருவரான வந்திய தேவனின் கதாபாத்திர தோற்றம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடிகர் கார்த்தி, வந்திய தேவனாக வசீகரிக்கும் தோற்றத்தில் மிளிர்கிறார்.
ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஒஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இந்த 'பொன்னியின் செல்வன்' எனும் டிஜிட்டல் படைப்பை பட குழுவினர் நேர்த்தியாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள் என ரசிகர்களும், திரையுலக வணிகர்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM