“சேர்“ தோல்வி என்பதற்காக நாட்டை தோல்வியடைய செய்ய முடியாது - ஹரீன் பெர்னாண்டோ

Published By: Digital Desk 3

05 Jul, 2022 | 04:42 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

கத்தோலிக்க சமூகத்தினரின் பிரதான குற்றவாளியாக கருதப்படும் தரப்பினருடன் எதிர்க்கட்சி தலைவர் திருமண பந்தத்தில் இணைந்துகொள்ள முயற்சிக்கிறார். தலைவர் தோல்வி என்பதற்காக நாட்டை தோல்வியடைய செய்ய முடியாது.

எனவே தான் மூன்று மாத கால அடிப்படையில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுள்ளோம். ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதவியை ஏற்க தயார் என எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிடவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (5)  பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாமென மக்கள் குறிப்பிடுவது நியாயமானது.

மோசமான நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள வேளையில் எதிர்த்தரப்பினரின் செயற்பாடு நாட்டை மென்மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் உள்ளன.

நாட்டில் தற்போது போராட்டம், எரிபொருள் மற்றும் எரிபொருள் ,ஊழல் மோசடி, 2019ஆம் ஆண்டுக்கு முற்பட்ட சூழல் மற்றும் தேர்தல் ஆகியவை தற்போதைய ஐந்து பிரதான பேசும்பொருளாக காணப்படுகிறது.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பொறுப்புக் கூற வேண்டும்.

நாட்டின் தற்போதைய பிரச்சினைகளை குறிப்பிட்டு, நெருக்கடிக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு  குறிப்பிடும் போது எதிர்தரப்பினர் முரண்பட்ட வகையில் செயற்படுவார்களாயின் நாட்டுக்கு கடவுளின் துணையே கிடைக்கப்பெற வேண்டும். தாம் தூய்மையானவர்கள் என்பதை காட்டிக் கொள்ள எதிர்தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்த கடிதத்தில் 'ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகினால் பிரதமர் பதவியை ஏற்க தயார்' என எவ்விடத்திலும் அவர் குறிப்பிடவில்லை. இந்த கடிதத்தை சபையில் சமர்ப்பிக்கிறேன்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படுவது நியாயமற்றது. தற்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் திருமண பந்தத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கத்தோலிக்க சமூகத்தினரது பிரதான குற்றவாளியாக கருதப்படும் நபருடன் திருமண பந்தத்தில் இணைய முற்படும் போது அந்த 52 நாள் அரசியல் டீல் இருக்காதா என்ற சந்தேகம் ஏற்படும்.

நாட்டில் போராட்டங்கள் உள்ளன. போராட்டத்தை வெற்றி பெற செய்வோம். நெருக்கடியை தோற்கடிப்போம். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்தரப்பினர் ஆட்சி பொறுப்பை ஏற்றாலும் இந்த நிலைமையே தொடரும். 

ஐக்கிய மக்கள் சக்தியினர் மக்கள் விடுதலை முன்னணியியையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் ஒன்றிணைத்து 113 பெரும்பான்மை பலத்தை நிரூபித்து அரசாங்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.

ஆட்சி பொறுப்பை ஏற்கும் அழைப்பு ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆரம்பத்தில் விடுக்கப்பட்டது. சேர் தோல்வி என்பதற்காக நாட்டை தோல்வியடைய செய்ய முடியாது என்பதற்காகவே அரசாங்கத்துடன் ஒன்றிணைந்துள்ளேன்.

3 மாத கால அடிப்படையில் பதவியில் இருக்க தீர்மானித்துள்ளேன். தற்போதைய போராட்டத்தை அழிவிற்கு கொண்டு செல்லும் வகையில் எதிர்தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படுகிறார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை

2025-02-13 15:52:58
news-image

எமது சமூகம் கட்டுக்கோப்புடன் வாழ அடித்தளம்...

2025-02-13 15:46:20
news-image

ராகமவில் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-13 15:33:30
news-image

வட மாகாணத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்த...

2025-02-13 15:36:23
news-image

ரஸ்ய உக்ரைன் யுத்தம் ஆரம்பமாகி மூன்று...

2025-02-13 15:15:29
news-image

நாட்டில் 2,000 வைத்தியர்கள் சுகாதார சேவையிலிருந்து...

2025-02-13 15:30:19
news-image

ஊடகவியலாளர் லசந்த படுகொலை : 3...

2025-02-13 14:49:33
news-image

மீகொடையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் உப பொலிஸ்...

2025-02-13 14:48:25
news-image

காற்றாலை மின்திட்டத்திலிருந்து விலகல் - அதானி...

2025-02-13 14:33:51
news-image

கத்தி முனையில் மிரட்டிய பாதுகாப்பு உத்தியோகத்தர்...

2025-02-13 14:06:19
news-image

பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து காயப்படுத்திய...

2025-02-13 14:56:50
news-image

கைவிடப்பட்ட நிலையில் கடுகண்ணாவை புகையிரத அருங்காட்சியகம்

2025-02-13 14:55:22