டொலர் பிரச்சினைக்கு தனி தீர்வு ; படைப்பாற்றல்மிக்க தேசிய முயற்சியாளர்

06 Jul, 2022 | 04:11 PM
image

உங்களைப் பற்றி கூறுங்கள் 

நான் ரணில் வில்லத்தரகே Gflock  என்ற  Clothing brand இன் தலைவர். தொழில் ரீதியில் ஒரு முயற்சியாளர். Fashion Designer ஆகவும் உள்ளேன். நான் பிறந்த ஊர் அக்குரஸ்ஸ. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தேன். 

இந்த ஊடக சந்திப்பின் நோக்கம்? 

இன்று பொருளாதார நெருக்கடியினால் அழிவை எதிர்கொண்டுள்ள எமது தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்கு டொலர் ஈட்டுவதற்கான தனி நிரந்தர தீர்வொன்றை முன்வைப்பதற்காகவேயாகும். 

அதற்கு  முன்னர்  Gflock   பற்றிய விளக்கம். உலகிலுள்ள ஏனைய Fashion brands கள் பிரதான நான்கு பருவங்களை அடிப்படையாக கொண்டு ஆடைகளை தயாரித்து சந்தைக்கு விநியோகிக்கும் போது Gflock வாரமொன்றிற்கு 40-50 ஸ்டைல்களில் workwear, casual, evening wear, linen, denim என பல்வேறு பரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி சமூக ஊடகங்களை பயன்படுத்த இலங்கைக்குள் Retail shop மூன்றும் Local online store மற்றும் Gflock.com ஊடாக சர்வதேச சந்தைக்கும் விநியோகிக்கப்படுகின்றன. 

உங்கள் வியாபாரத்தின் விசேடத்துவம் என்பது நீங்கள் பேசும் வட்டம் என்ற எண்ணக்கருவாகும். இதை பற்றி விபரியுங்கள். 

நாம் வாழ்வது பணம் ஈட்டுவதை அடிப்படையாக கொண்ட கேள்வி மற்றும் வழங்கலுக்கமைய விலை தீர்மானிக்கப்படும் பொருளாதார சூழலாகும். உலகில் அமெரிக்கா போன்ற முன்னணி மேற்குலக நாடுகள் கேள்வியை பிரதிநிதித்துவப்படுத்துடன் சீனா உள்ளிட்ட நாடுகள் பல கட்டப்பாடின்றிய மக்கள் தொகை உட்பட அந்த சனத்தொகையில் பாரியளவிலானோர் இந்த இரு நிலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாத நிலை காரணமாக அவர்களுக்கு இந்த மட்டுப்படுத்தபபட்ட வளப்பயன்பாட்டிற்கான சந்தர்ப்பம் தவறவிடுகின்றன. இந்நிலை காரணமாக 24000க்கும் அதிகமானோர் நாளாந்தம் பட்டினியில் அல்லது பட்டினியுடன் தொடர்புடைய நோய்களால் மரணிக்கின்றனர். 

செல்வாக்கு முறையானது முதற்கட்டமாக தனியார் பிரிவிலேயே தங்கியிருக்கும். அரசு பங்காளராக இருந்த போதிலும் இந்த கட்டமைப்புக்கு வழங்கக்கூடிய அழுத்தம் குறைவாகும். 

தனியார் பிரிவை எடுத்துக்கொண்டால் கேள்வியை பிரதிநிதிதித்துவப்படுத்தியும் நுகர்வோரின் விநியோகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியும் தனிநபர் முயற்சியாண்மையை அவதானிக்க முடியும். இந்த கட்டமைப்பில் முதற்கட்ட மனித தேவையின் பாரியளவிலான தேவைகளுக்கென ஒன்றிணைத்து குழப்பகரமான வாழ்வியலை சமூகத்திற்கு ஒப்படைத்துள்ளன. 

வழங்கலை பிரதிநிதித்துவப்படுத்தும் தனியார் முயற்சியாண்மை தனிநபர், தனியார் மற்றும் பல்தேசிய நிறுவனங்கள் என்ற வகையில் இருப்பதுடன் இதில் உலகில் வழங்கலில் அதிகமாக தாக்கம் செலுத்துவது மொடல் நிறுவனமாகும். இதன் உள்ளடக்கத்தை எடுத்துக்கொண்டால், உரிமையான்மை பங்குதாரர்களுக்கும், பங்குதாரர்கள் நியமிக்கும் பணிப்பாளர் சபைக்கும், பணிப்பாளர் சபை         நியமிக்கும்     நிறைவேற்று அதிகாரிகளைக் கொண்ட கட்டுப்பாட்டு முறையாக உள்ளது. சுற்றுவட்ட ரீதியில் பங்குதாரர்களால் தமது தேவைக்கமைய வியாபாரத்தை கொண்டு செல்வதற்கு CEO ஒருவர் நியமிக்கப்படுவார். 

பங்குதாரர்கள் சமூகத்திற்குள் வாழும் நுகர்வோர் தரப்பாகும். அவர்களினால் நுகர்வோரை விடவும் முதற்கட்ட தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் தரப்பினராக இருந்தாலும் பெருமளவில் அவர்கள் கீர்த்தியை அடிப்படையாக கொண்ட தேவைக்கு பின்னால் செல்பவர்கள். இங்கு தமக்கு தேவையான பணத்தை தேடிக்கொள்வதற்காக CEOஇனை செயற்படுத்தும் நடவடிக்கை இடம்பெறுவதுடன், தமது தொழில் பாதுகாப்பை தீர்மானிக்கும் பங்குதாரர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நிறுவனத்தின் CEO சலிப்பின்றி பொறுப்புடன் இருப்பார். 

இதற்கான தீர்வு என்ன என்பதை அறிந்துகொள்ள முடியுமா? 

இதற்கு தீர்வாக முயற்சியாளர்கள் அதிக இலாபத்தை ஈட்டுவதற்கு பதிலாக தமது சந்தை பெறுமதிக்கு ஏற்ற மற்றும் நிறுவனத்தினால் தாங்கிக்கொள்ளக்கூடிய ஊதியமொன்றை பெற்றுக்கொண்டு வியாபாரத்தின் ஊடாக கிடைக்கப்பெறும் இலாபத்தில் குறைந்தபட்சம் 1ஃ3 பங்காவது வளங்களை எதிர்பார்க்கும் சமூகத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் உங்களது நேரடி அல்லது சேவையாளர் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நிரந்தரமாக உதவுதல் அல்லது அந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு உதவியாக இருந்த தமது வாடிக்கையாளரிடமிருந்து கொள்வனவு செய்ய முற்படுதல் மற்றும் அதனை நிரந்தரமாக தமது வாடிக்கையாளர்களுக்கு தொடர்புபடுத்துவதன் ஊடாக அவர்களுக்கு உங்கள் ஊடாக கொள்வனவு செய்யப்படும் பொருள் அல்லது சேவையின் தார்ப்பரியத்தை விடவும் அதற்கு அப்பாற் சென்ற தார்ப்பரியத்தை ஏற்படுத்துவதன் ஊடாக அவர்கள் மீண்டும் ஒருமுறை அதனை கொள்வனவு செய்வதன் மூலம் இயல்பாகவே   அந்த வியாபாரத்தின் மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர். தமது நல்லொழுக்கங்களை பேணுவதற்கு வியாபாரத்தின் ஊடாகவும் வழி கிடைக்கும். இதன்மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து வியாபார சேவையாளருக்கும், வியாபார சேவையாளரிடமிருந்து முயற்சியாளருக்கும், முயற்சியாளரிடமிருந்து வாடிக்கையாளருக்கும் வெற்றியை ஈட்டும் வட்டமொன்று உருவாகும். 

எமது வியாபாரத்தின் நோக்கமானது, சமூகத்தில் துயர்படும் மக்களை அதிலிருந்து மீட்பதோடு,              மனிதாபிமானம் நிறைந்த இந்த முறையில் சமூகத்தில் பணம் மற்றும் இலாபத்தை கொண்டு வியாபாரமொன்றை மேற்கொள்வதாகும்.  

இந்த எண்ணக்கருவினை பிரயோக ரீதியாக எவ்வாறு கட்டியெழுப்பியுள்ளீர்கள்? 

வியாபாரத்தின் ஊடாக கிடைக்கும் இலாபத்தில் 1ஃ3 பங்கு எமது ஆடைத்தொழிற்சாலை        ஊழியர்களுக்கு     8000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்றாக மாதாந்தம் வழங்கப்படும்.இது எமது Gflock facebook கணக்கில் புகைப்படங்களுடன் பதிவு செய்யப்படும். 

ஆடை  கொள்வனவு செய்பவர்களுக்கு மரக்கன்றொன்றை வழங்குவதாக அறிந்தோம். இதைப் பற்றி கூறுங்கள். 

இயல்பு வாழ்க்கையில் ஒரு இலைக்கேனும் தீங்கு விளைவிக்க கூடாது என்ற சிந்தனையை மேம்படுத்தும் வகையிலும் சுற்றாடலுக்கு ஏற்படும் தீங்குகளை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இதனை செய்கின்றோம். 2018ம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்துடன் எம்மிடம் ஆடைகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மரக்கன்று ஒன்றை வழங்குவதை நோக்காக கொண்டோம். 

இலங்கையின் பொருளாதார பிரச்சினைக்கு நீங்கள் முன்வைத்த டொலர் தீர்வு என்ன? 

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் வருடமொன்றிற்கு சராசரியாக 300 அமெரிக்க டொலர் முதல் 500 அமெரிக்க டொலர் வரை ஆடைகளுக்காக வெளிநாட்டு வர்த்தக நாமங்களுக்கென செலவிடுகின்றனர். அதற்கு பதிலாக எதிர்வரும் காலங்களில்  எமது         இலங்கை        இளைஞர    ; பரம்பரையின் படைப்பாற்றிலில் ஆரம்பமான Gflock  Online order இல் வாங்குங்கள். இதனால் டொலர்களை இலகுவாக ஈட்டக்கூடிய வாய்ப்பு கிட்டும் என்பது எமது திடமான நம்பிக்கை.  இதற்காக இந்த வியாபாரத்தின் உரிமையாளர் அல்லது முயற்சியாளர் என்ற வகையில் வியாபார பங்கின் 51மூ இனை 2025 இல் அனைத்து இலங்கையர்களுக்கும் சொந்தமாக்க தயாராகவுள்ளேன். இதற்கு மேலதிகமாக  நாடு முழுவதும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி அவர்களுக்கு ஏற்ற மாதாந்த ஊதியம் மற்றும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் உலர் உணவுப் பொதிகளை வழங்கி துயரப்படும் மக்களை வலுப்படுத்தவும்  தயாராகவுள்ளோம்.

இந்த தீர்வு தொடர்பில் மேலும் விரிவாக கூறுவதாயின் 

Fashion company என்பது பாரியளவில் இலாபமீட்டக்கூடிய துறை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதிலும் முக்கியமாக ஒன்லைன் வாயிலாக பெருமளவு இலாபத்தை குறைந்த செலவில் பெறலாம்.  Gflock Business modelஆனது 5-7 வருடங்களில் வருடாந்த வருமானமாக 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க முடியுமென்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு தேவையான வகையில் scale up செய்து Gflock Business model ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 

இறுதியாக இதைப் பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்? 

இந்த தகவலை முடியுமானளவு விரைவில் வெளிநாடுகளிலிருக்கும் எமது இலங்கையர்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள் என ஊடகங்களிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன். இந்த பிரயத்தனத்திற்காக நீங்கள் செய்யும் பெரும் உதவியாக இது அமையும். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right