லங்கா பிறீமியர் லீக் : முன்கூட்டியே தமது அணியில் 4 வீரர்களை பதிவுசெய்தது ஜெவ்னா கிங்ஸ்

Published By: Digital Desk 5

05 Jul, 2022 | 01:45 PM
image

(நெவில் அன்தனி)

இந்த வருடம் நடைபெறவுள்ள லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) இருபது 20 கிரிக்கெட்  3ஆவது அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் அணி, 4 வீரர்களை முன்கூட்டியே தமது அணியில் பதிவு செய்துகொண்டுள்ளது.

எல்பிஎல் விதிகளுக்கு அமைய வீரர்களை அணிக்கு தெரிவு செய்யும் முறைமைக்கு முன்பதாக 2 உள்ளூர் வீரர்களையும் 2 வெளிநாட்டு வீரர்களையும் அணியில் இணைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய உள்ளூர் வீரர்களில் துடுப்பாட்ட சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா, இளம் சுழல்பந்துவீச்சு   நட்சத்திரம் துனித் வெல்லாலகே ஆகிய இருவரும் முன்கூட்டியே ஜெவ்னா கிங்ஸ் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வீரர்களில் மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர் எவின் லூயிஸ், தென் ஆபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ஹார்டஸ் வில்ஜோயன் ஆகிய இருவரும் முன்கூட்டியே ஜெவ்னா கிங்ஸ் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜெவ்னா கிங்ஸின் வழமையான அணித் தலைவர் திசர பெரேரா, அஷான் ரந்திக்க, சுழல்பந்துவீச்சாளர்களான   மஹீஷ் தீக்ஷன மற்றும் ப்ரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தொடர்ந்தும் ஜெவ்னா கிங்ஸ் அணியினால் தக்கவைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்   .

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3ஆவது எல்பிஎல் அத்தியாயம் இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது.

அதற்கான வீரர்களைத் தெரிவுசெய்யும் செயற்பாடுகள் இன்று பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

வழமைபோல் இந்த வருடமும் ஜெவ்னா கிங்ஸுடன் மேலும் 4 அணிகள் எல்பிஎல் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2023-09-26 11:18:45
news-image

ஆசிய விளையாட்டு விழா : கிரிக்கெட்டில்...

2023-09-25 15:20:39
news-image

ஆசிய ஒலிம்பிக் பேரவை கொடியின் கீழ்...

2023-09-25 11:40:58
news-image

உலகக் கிண்ண அணியில் ஹசரங்க, சமீர...

2023-09-25 10:49:38
news-image

வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகளில் 3ஆம் இடம்பெற்று...

2023-09-25 10:30:29
news-image

மெக்ஸ்வெல் 2010இல் முன்வைத்த யோசனைக்கு அமைய...

2023-09-25 10:46:37
news-image

கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல்,...

2023-09-25 09:54:57
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம்...

2023-09-25 07:01:59
news-image

ஆசிய விளையாட்டு விழாவை சீன ஜனாதிபதி...

2023-09-24 06:49:46
news-image

ஷமி 5 விக்கெட் குவியல், நால்வர்...

2023-09-23 10:53:17
news-image

19ஆவது ஆசிய விளையாட்டு விழா சினாவின்...

2023-09-23 10:25:11
news-image

அருணாச்சலப் பிரதேச வீராங்கனைகளுக்கு சீனா விசா...

2023-09-23 09:42:09