கரைச்சி நிருபர்
எரிபொருள் இன்மையால் வாழ்வாதாரத்தை இழக்கும் கிளிநொச்சி கடற்றொழிலாளர்கள் கிளிநொச்சியில் கடற்றொழில் ஈடுப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் எரிபொருள் இன்மையால் தாம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

பூநகரி, பளை, கண்டாவளையைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தங்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமையினை பலரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் இதுவரை எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இனியும் பொறுப்பு வாய்ந்தவர்களை நம்பி எரிபொருளுக்காக காத்திருந்தால் தமது குடும்பங்கள் உணவுக்கே வழியில்லாத நிலைமை ஏற்படும்.

எனவே தாம் பண்டையகாலத்து முறைப்படி பாய்மர படகு தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இதன் மூலம் சொற்ப அளவு வருமானத்தை மாத்திரமே பெற முடியும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனவேதான் தாம் தமது படகுகளில் பெட்சீட், மற்றும் பலமான துணியினை கட்டி கரையோர கடற்றொழிலில் ஈடுப்பட ஆரம்பித்துள்ளதாகவும், தெரிவிக்கும் அவர்கள் தமது கடலில் இந்திய இழுவைப் படகுகள் கண்முன்னே தொழில் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM