கட்டுநாயக்க விமான நிலையத்தில் துருக்கி விமானம் விபத்து

By T. Saranya

05 Jul, 2022 | 10:01 AM
image

கட்டு நாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட துருக்கி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை  இரவு கட்டு நாயக்க விமான நிலையத்தில் இருந்து துருக்கி நோக்கி புறப்படவிருந்த A 330 – 300 எயார் பஸ் வகையைச் சேர்ந்த விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து பொருட்களை ஏற்றிவந்த விமானம், 45 மெட்ரிக் தொன் நிறையுடைய ஆடைகளை ஏற்றிக்கொண்டு நாட்டிலிருந்து மீண்டும் புறப்படவிருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவும் கடும் காற்று காரணமாக விமானத்திற்கு கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்று விமானத்தின் இயந்திரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த விமானம் நாட்டிலிருந்து வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right