வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை விநியோகிக்க முடியாத நிலை

By Rajeeban

05 Jul, 2022 | 10:05 AM
image

மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்க முடியாத நிலை காணப்படுகின்றது  என அரசாங்க மருந்தாளர்கள் சமூகம் தெரிவித்துள்ளது.

பல தரப்பும் வழங்கிய மருந்துகள் மருந்துப்பொருட்கள் காரணமாக மருந்துகளிற்கான தட்டுப்பாடு ஒரளவு குறைந்துள்ளது.

எனினும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த மருந்துகளை மருத்துவமனைகளிற்கு விநியோகிக்க முடியாத நிலை காணப்படுகின்றது என அரசாங்க மருந்தாளர்கள் சமூகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களிற்கு முன்னர் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவில் போதியளவு மருந்துகளும் மருத்துவ பொருட்களும் இருக்கவில்லை. எனினும் பலதரப்பினதும் நன்கொடை காரணமாக இந்த பற்றாக்குறைக்கு ஓரளவு தீர்வு காணப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள என அரசாங்க மருந்தாளர்கள் சமூகத்தின் தலைவர் அஜித் திலகரட்ண எனினும் தற்போது மருந்துகளை மருத்துவப்பொருட்களை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ விநியோக பிரிவில் மருந்துகளும் மருத்துவ விநியோகமும் காணப்படுகின்ற போதிலும் வைத்தியசாலைகளில் அவை இல்லாத நிலை காணப்படுகின்றது உதாரணத்திற்கு சிறுநீரக நோயாளிகளிற்கான மருந்து மருத்துவ விநியோக பிரிவில் காணப்படுகின்றது.

ஆனால் சிறுநீரக நோயாளிகளிற்கு சிகிச்சை அளிக்கப்படும் அனுராதபுரம் வைத்தியசாலையில் அந்த மருந்து இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் கொழும்பில் உள்ள மருத்துவ விநியோக பிரிவிற்கு வாகனங்களை அனுப்பும் நிலையில் வைத்தியசாலைகள் இல்லை,எரிபொருள் இன்மை மருத்துவவிநியோக பிரிவின் வாகனங்களையும் பாதித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஒரு வைத்தியசாலை மாத்திரம் பாதிக்கப்படவில்லை பல வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தொலைதூரத்தில் உள்ள வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அரசாங்க மருந்தாளர்கள் சமூகத்தின் தலைவர் அஜித் திலகரட்ண தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right