(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சியில்  பழைமை வாய்ந்த மரமொன்று முழுமையாக சரிந்து விழுந்ததில் பலமணிநேரம்  ஏ9 வீதியில் போக்குவரத்து தாமதமடைந்திருந்தது.


கிளிநொச்சி ஏ9 வீதி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள பழைமை வாய்த ஆல மரம் சரிந்து விழுந்ததில் பல நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

நேற்று புதன் கிழமை இரவு ஒன்பது முப்பது மணியளவில்  மழை பெய்து கொண்டிருந்த வேளை குறித்த மரம் வேரோடு சரிந்து ஏ9 வீதிக்கு குறுக்காக விழ்ந்துள்ளது. இதனால் பல மணி நேரம்போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

கிளிநொச்சி மாவட்ட அனார்த்த முகமைத்தினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரும் இணைந்து செயல்பட்டதால் தற்காலிகமாக நேற்றிரவு போக்குவரத்தை விரைவுபடுத்த முடிந்தது.

இருந்த போதிலும் குறித்த மரத்தை அங்கிருந்து  முற்றாக இன்னமும்  அகற்றவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.