இலங்கை அணியின் பிரவீன் ஜெயவிக்ரமவுக்கு கொரோனா தொற்று 

By T Yuwaraj

04 Jul, 2022 | 10:22 PM
image

இலங்கை அணியின் வீரர் பிரவீன் ஜெயவிக்ரமவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை உடல்நிலை சரியில்லை’ என்று அவர்  கூறியபோது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையின் மூலம் ‘அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, அவர் 5 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக எதிர்வரும் 8ஆம் திகதி காலியில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும், ஏனைய வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

முன்னதாக இலங்கை அணி வீரர் அஞ்சலோ மெத்யூஸ்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right