29 ஆவது மாடியிலிருந்து விழுந்து 3 வயது பாலகன் பரிதாப மரணம்

By T Yuwaraj

04 Jul, 2022 | 09:16 PM
image

உயரமான மாடிக் கட்டிடங்களில் வசிக்கும் பெற்றோர் தமது சிறுவர்களான பிள்ளைகள் தொடர்பில் எந்தளவுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு அமெரிக்க நியூயோர்க் நகரில்  அண்மையில் இடம்பெற்ற  சம்பவம் ஒரு முன்னுதராணமாக உள்ளது. 

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம்  குறித்து விரிவான செய்திகள் இன்று  திங்கட்கிழமை (04.07.2022) வெளியாகியுள்ளன

நியூயோர்க் நகரிலுள்ள  உயர்ந்த  மாடிக் கட்டிடமொன்றின் 29 ஆவது மாடியிலிருந்த தனது வீட்டில் தனித்து விளையாடிக் கொண்டிருந்த  3 வயது சிறுவனான  ஜேஸ் கார்சியா அந்த மாடி மாடத்திலிருந்து விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினம் கார்சியாவின் தாயாரான ஜேடாவும் அவருடன் திருமணம் செய்யாது இணைந்து வாழும் அவரது வாழ்க்கைத் துணையும் குறிப்பிட்ட பாலகனின் தந்தையுமான  ஜூலியோ கார்சியாவும்  வெவ்வேறு அறைகளில் தமது வேலைகளில் மூழ்கியிருக்க பாலகனான கார்சியா வரவேற்பு அறையில் தனித்து  இருந்துள்ளார்.

தமது சின்னஞ்சிறு மகன்  அந்த அறையில் பாதுகாப்பாக  விளையாடிக் கொண்டிருப்பதாக பெற்றோர் கருதியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்தப் பாலகன்  எவ்வாறோ ஏறி மாடி மாடத்திலிருந்த வலை போன்ற மறைப்புக் கட்டமைப்பினூடாக   தவறிக கீழே விழுந்துள்ளார்.  அவனது உடல்  கீழே 5 ஆவது  மாடியில் வெளிநீட்டியிருந்த கட்டமைப்பில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அந்த சிறுவனின் தாயான ஜேடா ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் குழந்தைகள் பராமரிப்பு தொடர்பில் அலட்சியத்துடன் செயற்பட்டதாக  குற்றச்சாட்டுக்குள்ளானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன் அவரது வாழ்க்கைத் துணையான ஜூலியோ  வீட்டு வன்முறைகள் தொடர்பி;ல் 9 வெவ்வேறு  வழக்குகளில் பெயர்  குறிப்பிடப்பட்டவராவார். அந்த வழக்குகளில் 7 வழக்குகளில் அவர் பாதிக்கப்பட்டவராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.  அவருக்கு எதிரான  வீட்டு வன்முறைகளில் குறிப்பிட்ட பாலகனின் தாயரான ஜேடாவா தொடர்புபட்டிருந்தாரா என்பது அறியப்படவில்லை.

இந்நிலையில் ஜேடா  தனது பிள்ளை தொடர்பில் அலட்சியமாக செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார்.

அவர்  தனது மகன் இறந்து கிடப்பதைக் கண்டதும்  நிலத்தில் மண்டியிட்ட நிலையில்,  என் குழந்தை, என் குழந்தை எனக் கதறி அழுதமை  அனைவரதும் மனதை  உருக்குவதாக இருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right