( எம்.எப்.எம்.பஸீர்)
குருணாகல், யக்கஹபிட்டிய ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து, தான் நபர் ஒருவர் மீது காலால் உதைத்து தாக்கிய போதும், அது அந் நபரின் மேணியில் படவில்லை என குருணாகல் நகர பகுதியின் இராணுவ லெப்டினன் கேர்ணல் தர கட்டளை அதிகாரியான விராஜ் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் மற்றும் சமூக வளைத்தளங்களில் பரவி வரும் வீடியோ காணொளி தொடர்பில் அவரை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தான் குருணாகல் பகுதியில் சேவையாற்றும் நற்பெயர் மிக்க இராணுவ அதிகாரி என குறிப்பிடும் லெப்டினன் கேரணல் விராஜ் குமாரசிங்க, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே பாதாள உலகக் கோஷ்டியினர் ஒன்றுகூடியுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய தாம் அங்கு சென்றதாக கூறினார்.
தான் காலால் உதைத்தது உண்மையே என குறிப்பிட்ட லெப்டினன் கேர்ணல் விராஜ் குமாரசிங்க, எனினும் அந்த தாக்குதல் குறித்த சிவியன் மேல் விழவில்லை எனவும், குறித்த நபரிடமே அது தொடர்பில் கேட்டுப்பார்க்க முடியும் என தெரிவித்தாஎர்.
எவ்வாறாயினும் குறித்த இராணுவ அதிகாரி தொடர்பில் நிறுவன மட்டத்திலான உடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM