(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சர்வதேச நாயண நிதிய பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோலிவயடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
இதன் உண்மை தன்மையை அரசாங்கம் பாராளுமனறத்துக்கு தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளின் பிரதமகொரட லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 04 ஆம் திகதி திங்கட்கிழமை வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின் போது இடையீட்டு கேள்வியொன்றை முன்வைத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தது. இந்த கலந்துரையாடலின் பெறுபேறுகள் தொடர்பில் நாட்டு மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
அரசாங்கம் இதுதொடர்பாக பாராளுமன்றத்துக்கு அறிவிக்கும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வாறான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிபெற வேண்டும் என்றே நாங்கள் பிராத்திக்கின்றோம்.
ஏனெனில் அவர்களின் உதவி மூலமே மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகண்டு, நாட்டை கட்டியெழுப்ப முடியும். அதன் பின்னர் எமக்கு அரசியல் செய்யலாம்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வி என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.. குறிப்பாக அமெரிக்க ஊடகங்களே செய்தி வெளியிட்டிருந்தது.
அதனால் இதன் உண்மை தன்மை தொடர்பில் நாங்கள் அறிந்துகாெள்ள வேண்டி இருக்கின்றது. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை முன்வைப்பது நல்லது என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இதற்கு அமைச்சர் பந்துல குணவர்த்தன பதிலளிக்கையில், சர்வதேச நாணய நிதிய குழுவினருடன் ஜனாதிபதி, நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் உட்பட அதிகாரிகள் பல சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்தனர். இந்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பாக பிரதமர் 05 ஆம் திகதி செவ்வாய்கிழமை சபைக்கு அறிவிப்பார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM