லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகளை சிறைப் பிடித்த ஜம்மு காஷ்மீர் மக்கள்

By Digital Desk 5

04 Jul, 2022 | 07:30 PM
image

(ஏ.என்.ஐ)

ஜம்மு காஷ்மீர் - ரியாசி மாவட்டத்தில்  பாதுகாப்பு துறையினரால் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை கிராம மக்கள் துணிச்சலாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

துக்சன் தோக் கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளர்.

ஜம்மு-காஷ்மீர்  பொலிஸாரின் தகவல்களின் படி, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கையின் பிறகு பயங்கரவாதிகள் தக்சன் தோக் கிராமத்தில் தஞ்சம் புகுந்தனர். இதன் போதே மக்கள் அவர்களை அடையாளங் கண்டு பொலிஸாரிடம் சிக்க வைத்துள்ளனர்.  பயங்கரவாதிகளிடமிருந்து இரண்டு ஏ.கே ரக துப்பாக்கிகள், ஏழு கைக்குண்டுகள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஏராளமான தோட்டாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி காசிமுடன் தொடர்பில் இருப்பதாகவும், ரஜோரி மாவட்டத்தில்  இடம்பெற்ற குறைந்தது மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையின் போது, பயங்கரவாதிகள் இருவரும் தொடர்ந்தும் பாகிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பா கையாள்வாளர் சல்மானுடனும் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, கிராம மக்களின் தைரியத்தைப் பாராட்டியதுடன், இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை கைது செய்யும் துணிச்சலான கிராம மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right