(க.கிஷாந்தன்)
அட்டன் ஐ.ஓ.சீ பெற்ரோல் நிரப்பும் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றவர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
ஒரு சிலர் தங்களுக்கு நெருக்கியவர்களை வரிசையின் இடையில் புகுத்துவதற்கு முற்பட்டதன் காரணமாகவும், ஒரு சிலர் வரிசையில் வராது பெற்றோல் பெற்றுக்கொள்ள முற்பட்டதன் காரணமாகவும் இந்த முறுகல் நிலை ஏற்பட்டது.
அட்டன் நகரிலுள்ள ஐ.ஓ.சீ எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு, ஒரு வாரத்துக்குப் பின்னர். 04 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் பெற்றோல் பௌசர் வந்தது. அதிலிருந்து இறக்கப்பட்ட எரிபொருளே, விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இதனை தொடர்ந்து அட்டன் நகரில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
பெற்றோல் நிரப்புவதற்கு கடந்த இரண்டு, மூன்று நாட்கள் காத்திருப்பவர்களுடன் இன்று கேள்வியுற்ற பலர் எரிபொருள் பெற்றுக்கொள்ள வருகை தந்தமையினால் அட்டன் பிரதான வீதி, அட்டன் சுற்றுவட்ட வீதி, டன்பார் வீதி, உள்ளிட்ட பல வீதிகளில் வாகன நெரிசல் நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM