எரிவாயு விநியோக கட்டமைப்பு தொடர்பில் ஆராய லிட்ரோ நிறுவனத்திற்கு கோப் குழு அழைப்பு

By Vishnu

04 Jul, 2022 | 05:05 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) மற்றும் அரசாங்க நிதி பற்றிய குழு  இவ்வாரம் கூடவுள்ளன. அதற்கமைய எரிவாயு விநியோக கட்டமைப்பு தொடர்பில் ஆராயும் நோக்கில் கோப் குழுவிற்கு லிட்ரோ நிறுவனமும்,லிட்ரோ டேர்மினல்  லங்கா நிறுவனமும் முன்னிலையாகவுள்ளன.

பொது போக்குவரத்து துறையின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பேராசிரியர் திஸ்ஸ விதாரன தலைமையிலான கோபா குழுவிற்கு முன்னிலையாகவுள்ளனர்.

அத்துடன் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுவார் ஆலோசனை குழு அதன் தலைவர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் 05 ஆம் திகதி கூடவுள்ளது.

அத்துடன் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான குழு 05 ஆம் திகதி கூடவுள்ளதுடன் ,குழுவிற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அழைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 06 ஆம் திகதி புதன்கிழமை கூடவுள்ள கோப் குழுவிற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அழைக்கப்படவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ள எரிவாயு சிலிண்டர்...

2022-12-08 15:31:51
news-image

முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லவும் -...

2022-12-08 15:20:04
news-image

கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு அனுமதியளித்த விவகாரம்...

2022-12-08 15:35:50
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய...

2022-12-08 15:21:32
news-image

பொலிஸாரை மிரட்டி, வீடியோ காட்சிகளை சமூக...

2022-12-08 14:51:03
news-image

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி...

2022-12-08 14:58:47
news-image

கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான...

2022-12-08 14:26:11
news-image

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...

2022-12-08 14:19:05
news-image

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்

2022-12-08 14:38:40
news-image

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்தின் முன்...

2022-12-08 14:29:48
news-image

கொழும்பில் தீ விபத்து

2022-12-08 13:48:01
news-image

நாமலுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

2022-12-08 13:37:40