சாய் பல்லவி நடிக்கும் 'கார்கி' வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

By Vishnu

04 Jul, 2022 | 04:08 PM
image

'ரவுடி பேபி' புகழ் நடிகை சாய் பல்லவி கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'கார்கி' படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'கார்கி'. இதில் சாய் பல்லவி கதையின் நாயகியாக நடிக்க, நடிகர் காளி வெங்கட் அழுத்தமான இடத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரேயாந்தி மற்றும் பிரேம கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். 

இந்த திரைப்படத்தை சூர்யா - ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன் மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. தற்போது இந்த திரைப்படம் ஜூலை 15ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'தியா', 'மாரி 2', 'என் ஜி கே' ஆகிய மூன்று படங்களில் நடித்திருந்தாலும், வெற்றியை சந்திக்காத நடிகை சாய் பல்லவி, நடிப்பில் தயாராகி இருக்கும் இந்த ' கார்கி' திரைப்படம் தமிழ் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right