'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன் அறிமுகம்

Published By: Digital Desk 5

04 Jul, 2022 | 04:07 PM
image

மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் 'பொன்னியின் செல்வன்' எனும் திரைப்படத்தில் இடம்பெறும் ஆதித்ய கரிகாலன் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் சீயான் விக்ரமின் தோற்றப் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.

புத்தக வாசிப்பாளர்களிடையே மிகவும் பிரபலமான சரித்திர நாவல் 'பொன்னியின் செல்வன்'. நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு லைகா நிறுவனம் - மணிரத்னம் ஆகியோர்களின் கூட்டு முயற்சியில் இந்த நாவல் இரண்டு பாகங்களாக 'பொன்னியின் செல்வன்' எனும் பெயரிலேயே திரைப்படமாக உருவாகிறது.

இதில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் ,கன்னட மொழிகளிலும் வெளியாகிறது.

இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில், ஏ ஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற 'வருகிறான் சோழன்' என்ற காட்சித் துணுக்கு வெளியானது. இதற்கு இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது இதில் ஆதித்யா கரிகாலனாக நடித்திருக்கும் சீயான் விக்ரம் அவர்களின் கதாபாத்திரத்தோற்றம் புகைப்படமாக வெளியிடப்பட்டிருக்கிறது. சீயான் விக்ரம் கம்பீரமானத் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இனி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தோற்ற புகைப்படம் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின்...

2024-04-12 01:09:32
news-image

அமீரின் தேர்தல் கால முழக்கமாக ஒலிக்கும்...

2024-04-11 21:33:36
news-image

நடிகர் அவினாஷ் நடிக்கும் 'நாகபந்தம்' டைட்டில்...

2024-04-11 02:21:33
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-11 02:17:58
news-image

நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடிக்கும்...

2024-04-11 02:01:18
news-image

விதார்த் நடிக்கும் 'லாந்தர்' பட ஃபர்ஸ்ட்...

2024-04-10 13:13:42
news-image

உதைபந்தாட்ட பயிற்சியாளரின் வாழ்வியலை பேசும் 'மைதான்'

2024-04-10 13:14:51
news-image

தப்பி பிழைக்குமா 'வல்லவன் வகுத்ததடா'..!

2024-04-10 13:32:19
news-image

குகன் சக்கரவர்த்தியார் நடித்து இயக்கும் 'வங்காள...

2024-04-10 10:51:22
news-image

டிஜிட்டலில் வெளியாகும் 'பிரேமலு'

2024-04-10 10:20:51
news-image

வைட் ரோஸ் - விமர்சனம்

2024-04-08 17:11:02
news-image

டபுள் டக்கர் - விமர்சனம்

2024-04-08 17:09:06