தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

By Digital Desk 5

04 Jul, 2022 | 02:42 PM
image

நடிகர் தனுஷ் நடித்த புதிய படத்திற்கு 'கேப்டன் மில்லர்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக்கிற்கான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இணையத்தில் வெளியான குறுகிய நேரத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனையும் படைத்திருக்கிறது.

'ராக்கி', 'சாணி காயிதம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.

இதில் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' 1930 -40 களின் பின்னணியில் பீரியட் ஃபிலிமாக 'கேப்டன் மில்லர்' தயாராகிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

படத்தின் திரைக்கதைக்காக ஓராண்டு காலம் ஆய்வு பணியிலும், முன் தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டோம். படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.'' என்றார்.

நடிகர் தனுசை வைத்து 'தொடரி', 'பட்டாஸ்', 'மாறன்' ஆகிய படங்களை தயாரித்திருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் மீண்டும் தனுசை கதாநாயகனாக வைத்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் 'கேப்டன் மில்லர்' படத்தைத் தயாரிப்பதால், இந்த படம் வெற்றி பெற வேண்டும் என திரையுலக வணிகர்களும், தனுஷின் ரசிகர்களும் பிரார்த்திக்கிறார்கள்.

இவர்களின் பிரார்த்தனை நிறைவேறுவது போல் 'கேப்டன் மில்லர்' படத்தின் டைட்டில் லுக்கிற்கான மோஷன் போஸ்டர் வெளியான குறுகிய காலகட்டத்தில் ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right