எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் நபர் ஒருவரை இராணுவ அதிகாரி தாக்கிய சம்பவம் - பொதுமக்கள் இருவர் கைது- விசாரணைகள் ஆரம்பம்

Published By: Rajeeban

04 Jul, 2022 | 12:55 PM
image

எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில்  நபர் ஒருவரை இராணுவஅதிகாரியொருவர் காலால் உதைத்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவபேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இரு பொதுமக்களை கைதுசெய்துள்ளதாகவும் இராணுவபேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள்  நிரப்பும்நிலையத்தில் நபர் ஒருவரை இராணுவ அதிகாரி காலால் உதைத்தமை குறித்து  உள்ளக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என தெரிவித்துள்ள இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரட்ண இராணுவத்தினரை ஆபாசவார்த்தைகளால் ஏசிய சிலரை பொலிஸார் இராணுவத்தினர் முன்னால் கொண்டுசென்றவேளை இந்த சம்பவம் இடம்பெற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மோசமான விதத்தில் வன்முறையான விதத்தில் செயற்பட்ட இருவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக சிலர் இவ்வாறான திட்டமிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர் எனவும் இராணுவபேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் இராணுவஅதிகாரியொருவர் பொதுமகனை காலால் உதைக்கும் வீடியோ சமூகஊடகங்களில் வெளியாகியுள்ளது.

எரிபொருள் நிரப்புநிலையத்தில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

நபர் ஒருவரை இராணுவத்தினர் பிடித்து இழுத்து அதிகாரியின் முன்னால் கொண்டுசெல்வதையும் அவர் காலால் உதைப்பதையும் வீடியோ காண்பிக்கின்றது.பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயல்கின்றார்.

இராணுவஅதிகாரியொருவர் இன்னொருவரை அழைப்பதையும் அவருடன் தர்க்கத்தில் ஈடுபடுவதையும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் காணப்படும் நபரை எச்சரிப்பiயும் காணமுடிகின்றது.

பலநாட்களாக எரிபொருள் பெறுவதற்காக காத்திருக்கும் பொதுமக்கள் இராணுவத்தினராலும் பொலிஸாராலும் தாக்கப்படும் சம்பவங்கள் எரிபொருள் நெருக்கடி காரணமாக அதிகரிப்பதாக ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கருத்துக்கள் வெளியாகின்றன.

சிறிதளவு எரிபொருளை பெறுவதற்காக பல நாட்கள் காத்திருக்கும் மக்களை மீறி இராணுவத்தினரும் பொலிஸாரும் எரிபொருளை பெறமுயலும்போதே இந்த சம்பவங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தம்புள்ள குருநாகல் வீதியில் உள்ள யகப்பிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  எரிபொருளை பெறுவதற்காக பல நாட்கள் காத்திருந்த ஒருவர் ஏன் பொதுமக்களிற்கு எரிபொருளை வழங்காமல் இராணுவத்தினருக்கு வழங்குகின்றீர்கள் என கேள்வி எழுப்பியவேளையே வெகெர இராணுவமுகாமை சேர்ந்த இராணுவ அதிகாரி காலால் தாக்கியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33