பொது மக்களை தாக்கும் இராணுவத்தினர் : அபாய சமிக்ஞையின் வெளிப்பாடு

Published By: Digital Desk 5

04 Jul, 2022 | 12:27 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு  முதலில் பொலிஸாரும் பின்னர் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக  நியமிக்கப்பட்டிருந்தனர்.

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகள் பற்றி பொது மக்கள் கேள்வியெழுப்பினால் அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கைது செய்யும் வழக்கத்தை பொலிஸார் ஆரம்பத்தில் பின்பற்றினர்.

இது நாடெங்கினும் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியது மட்டுமல்லாது மக்கள் மத்தியில் எதிர்ப்பையும் உருவாக்கியிருந்தது. 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொது மக்களிடம் சற்று பொறுமையாக நடந்து கொள்ளும்படி பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன் பின்னர் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள பொலிஸார் தமக்கு தேவையானவர்களை அழைத்து வந்து மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோல், டீசல்களை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை செய்தனர். 

இது அங்கு காவலில் இருந்த இராணுவத்தினருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதன் உச்சகட்டமாக வரக்காபொலவில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த இராணுவ வீரரால் கடுமையாக தாக்கப்பட்டார். 

இவையெல்லாம் ஒரு பக்கமிருக்க தற்போது இராணுவத்தினரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீதி கேட்கும் மக்களை தாக்க ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞர் ஒருவரை எட்டி உதைக்கும் காணொளி சமூக ஊடகங்களிலும் இணையங்களிலும் வைரலாகி வருகின்றது. ஆனால் இது எவ்விடத்தில் இடம்பெற்றது என்பது குறித்து இன்னும் உறுதியாக தகவல்கள் இல்லை. 

இளைஞர் ஒருவரை இராணுவ வீரர்கள் கைகளை பிடித்து தமது உயரதிகாரியிடம் அழைத்து வருகின்றனர். உடனே அவ்விடத்திலிருக்கும் இராணுவ அதிகாரி இளைஞனின் மார்பில் எட்டி உதைக்கிறார். அது குறித்து கேள்வி கேட்க வந்த இளைஞரையும் எச்சரித்து அங்கிருந்து போகும் படி கூறுகின்றார்.

இதை பார்த்துக்கொண்டிருக்கும் பொலிஸ் அதிகாரி மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் இளைஞர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறுகின்றார்களே ஒழிய இராணுவ அதிகாரியின் செயல் குறித்து பேசுவதற்கு அங்கு எவருக்குமே தைரியம் இல்லை. ஏனென்றால் அங்கு பொலிஸாரை விட இராணுவ வீரர்களே அதிகமாக இருக்கின்றனர். 

இவ்வாறு பொது மக்களை தாக்குவதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் ஒன்று சேர்ந்திருப்பது அபாயமான விளைவுகளை ஏற்படுத்தப்போகின்றது.

ஒரு கட்டத்தில் பொது மக்கள் பொறுமையிழந்து பாதுகாப்பு தரப்பினரின் மீது கை வைக்கும் நிலைமைகள் ஏற்படலாம். இதையா இந்த அரசாங்கம் விரும்புகின்றது? 

பொது மக்கள் வீணாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லையென்பதை அரசாங்கம் நன்கு அறியும். நாள்கணக்காக வரிசைகளில் காத்திருக்கும் அவர்கள் அனைவருக்கும் இறுதி தருணத்தில் எரிபொருட்கள் மறுக்கப்படுகின்றன.

ஆனால் நிரப்பு நிலையத்தில் எரிபொருட்கள் பதுக்கி வைக்கப்படுகின்றன. இவற்றை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தமக்கு தேவையானவர்களுக்காக பாதுகாக்கின்றனர் என்பதே பொது மக்களின் குமுறல்களாக இருக்கின்றன. இதை மறுக்கவும் முடியாது. 

பாதுகாப்பு மற்றும் சுகாதார தரப்பினருக்கு எரிபொருள் வழங்கலில் முதலிடம் வழங்குமாறு அரசாங்கம் அறிவித்தாலும் கூட, ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் அதிகளவான பெற்றோல் டீசல்களைப் பெற்று அதை அதிக தொகைக்கு வெளியாருக்கு கொடுப்பதாகவும் முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

இதற்கு குறித்த பிரதேசத்தில்  உள்ள சில வர்த்தகர்கள் மற்றும் பொலிஸாரிடம் நட்பை பேணும் தனிநபர்களும் அடங்குவர். அதே வேளை மண்ணெண்ணெய் தவிர கேன்களில் பெற்றோல் , டீசல்களை விநியோகிக்க முடியாது என அரசாங்கம் அறிவித்தாலும் பொலிஸார் தாராளமாக அதை முன்னெடுக்கின்றனர் என்பதும் முக்கிய விடயம். 

போலிஸ் ஜீப்களில் வந்து கேன்களில் அவற்றை எடுத்துச்செல்கின்றனர். அவை யாருக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பது தெரியாதுள்ளது.

அன்றாடம் ஆட்டோ ஓட்டி பிழைக்கும் இளைஞர்கள் ,குடும்பஸ்தர்கள் இதை கண்டு கொதித்தெழுகின்றனர். அதே வேளை மண்ணெண்ணெய் விடயத்திலும் இவ்வாறு ஊழல்கள் அதிகரித்துள்ளன.

ஆனால் இது குறித்து கேள்வி எழுப்ப போனால் தற்போது இராணுவத்தினரும் பொலிஸாரும் அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றனர். 

இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாதுள்ளது. இளைஞர்களும் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு தரப்பினரோடு மோதும் நிலைமை ஏற்பட்டால் அது நாடு முழுக்க பதற்றத்தை ஏற்படுத்துவதோடு வன்முறையாக பரவும் அபாயம் உள்ளது.

இது குறித்து அரசாங்கம் உடனடியாக சில முடிகளுக்கு வர வேண்டும். அதை விடுத்து வீணே பாராளுமன்றை கூட்டி அநாவசியமான விடயங்களை பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐந்து ஆண்டுகளாகியும் அகலாத அதிர்வுகள்

2024-04-21 11:52:39
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ஐந்து...

2024-04-21 12:05:56
news-image

தமிழகத்தில் சுறுசுறுப்பான வாக்குப்பதிவு : இந்திய...

2024-04-20 18:02:56
news-image

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் சித்தாந்த போர்

2024-04-20 11:28:47
news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13