பிரேசிலில் குரங்கு அம்மை நோய் தொற்று அதிகரிப்பு

Published By: Digital Desk 3

04 Jul, 2022 | 11:54 AM
image

பிரேசில் பிரேசிலில் குரங்கு அம்மை நோய் தொற்று அதிகரித்துள்ளது.

பிரேசிலில் இதுவரை 76 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய அனைத்துத் தரவுகளையும் சேகரிக்குமாறு சுகாதார கண்காணிப்பு மூலோபாய தகவல் மையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

லத்தீன் அமெரிக்காவில் அதிக சனத்தொகை கொண்ட நாடான பிரேசிலில் 52 உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளுடன்  அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்களை பதிவு செய்துள்ள மாநிலமாக சாவ் பாலோ உள்ளது. அதனை தொடர்ந்து ரியோ டி ஜெனிரோவில் 16 தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள தொற்றாளர்கள் மினாஸ் ஜெரைஸ், ரியோ கிராண்டே டோ சுல், ரியோ கிராண்டே டோ நோர்டே மற்றும் ஃபெடரல் மாவட்டங்களில் பதிவாகியுள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரேசில் நாட்டில் ஜூன் மாத தொடக்கத்தில் சாவ் பாலோ நகரில் முதலாவது குரங்கு அம்மை நோய் தொற்று  பதிவாகியுள்ளது. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்குச் சென்ற 41 வயதுடைய ஒருவரிடம்  குரங்கு அம்மை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52