காலி ஆர்ப்பாட்டக்காரர்களால் எங்கள் கவனம் பாதிக்கப்படவில்லை- அவுஸ்திரேலிய வீரர்கள்

Published By: Rajeeban

04 Jul, 2022 | 11:12 AM
image

காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்;ட்போட்டியின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்றுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுக்கவில்லை என அவுஸ்திரேலிய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

துடுப்பாட்டவீரர்களின் கவனத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதன் காரணமாகவே முதலாவது டெஸ்;;ட்போட்டியின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர் என தெரிவிக்கப்படுவதை அவுஸ்திரேலிய வீரர்கள் நிராகரித்துள்ளனர்.

காலிமைதானத்தை பார்த்தவாறு காணப்படும் காலிகோட்டையில் கிரிக்கெட் போட்டிகளின் போது பெருமளவு ரசிகர்கள் காணப்படுவது வழமை.ஆடுகளத்தில்  இடம்பெறுவதை தெளிவாக பார்க்கலாம் என்பதால் ரசிகர்கள் அந்த இடத்தை விரும்பி தெரிவு செய்வார்கள்.

இரண்டு டெஸ்ட்போட்டிகளை கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட்டின் போது நாடு எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கை அரசாங்கத்தி;ற்கு எதிரான பதாகைகளை ஏந்திய இரசிகர்கள் காலி கோட்டையில் காணப்பட்டனர்.

டெஸ்ட்போட்டியின் இரண்டாவது நாளன்று ஆர்;பட்டாக்காரர்கள் பலவந்தமாக அகற்றப்பட்டனர்  போட்டியின் இறுதி நாளன்று அரண்பகுதிக்கு எவரையும் செல்ல அனுமதிக்காத அதேவேளை அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

துடுப்பாட்டவீரர்களின் கவனத்தை குழப்பக்கூடிய பதாகைகளை  ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்தினார்கள் என இராணுவபேச்சாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

எனினும் பதாகைகள் துடுப்பாட்டவீரர்களின் கவனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தின என தெரிவிக்கப்படுவதை அவுஸ்திரேலிய வீரர்கள் நிராகரித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியின் பேச்சாளர் இதனை நிராகரித்துள்ளார்.

காலிகோட்டையின் மேல் பதாகைகளுடன் காணப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் காரணமாக தங்கள் கவனம் பாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுவதை அவுஸ்திரேலிய வீரர்கள் நிராகரித்தனர் என த ஏஜ் மற்றும் சிட்னி மோர்னிங் ஹெரால்ட் ஆகியன தெரிவித்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41