இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை சமப்படுத்தும் முயற்சியில் இலங்கை மகளிர் அணி 

By Digital Desk 5

04 Jul, 2022 | 10:36 AM
image

இந்தியாவுக்கு எதிரான மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 1 - 2 என்ற ஆட்டக் கணக்கில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் தோல்வி அடைந்த இலங்கை, பல்லேகலையில் இன்று நடைபெறவுள்ள 2 ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்த முயற்சிக்கவுள்ளது.

Hasini Perera played an attacking knock of 37 at the top, Sri Lanka vs India, 1st women's ODI, Pallekelle, July 1, 2022

இந்த கிரிக்கெட் தொடர் ஐசிசி சம்பியன்ஷிப் தொடராகவும் அமைகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை இதே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் 6 விக்கெட்களால் தோல்வி அடைந்த இலங்கை, இன்றைய போட்டியில் வெற்றிபெறுவதாக இருந்தால் சகலதுறைகளிலும் பிரகாசிப்பது அவசியமாகும்.

முதலாவது போட்டியில் ஹசினி பெரேரா, ஹர்ஷிதா சமரவிக்ரம, நிலக்ஷி டி சில்வா ஆகிய மூவரே துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

அணித் தலைவி சமரி அத்தப்பத்து பிரகாசிக்க தவறும் போட்டிகளில் எல்லாம் இலங்கைக்கு தோல்வியே கிடைத்துவந்துள்ளது.

Nilakshi de Silva sweeps one during her knock of 43, Sri Lanka vs India, 1st women's ODI, Pallekelle, July 1, 2022

எனவே, சமரி அத்தப்பத்து நீண்ட நேரம் தாக்குப்பிடித்து கணிசமான ஓட்டங்களைக் குவிப்பது இலங்கை அணிக்கு சாதகமான முடிவு கிடைக்க உதவும்.

பந்துவீச்சில் இனோக்கா ரணவீர திறமையாக செயற்படுகின்ற போதிலும் ஏனையவர்களால் இந்திய துடுப்பாட்ட வீராங்கனைகளை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.

எனவே, இந்தியாவை வெற்றிகொள்வதாக இருந்தால் இலங்கை அணி சகலதுறைகளிலும் நுட்பத்திறனுடனும் சிறந்த வியூகங்களுடனும் விளையாடுவது அவசியமாகும்.

Nilakshi de Silva and Anushka Sanjeewani added 47 for the sixth wicket, Sri Lanka vs India, 1st women's ODI, Pallekelle, July 1, 2022

மறுபுறத்தில் ஹார்மன்ப்ரீத் தலைமையலான இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை தனதாக்கிக்கொள்ள முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் இந்திய அணியில் 8ஆம் இலக்கம் வரை சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைகள் இடம்பெறுவது அவ்வணிக்கு சாதகமாக அமைகின்றது.

அணிகள் விபரம்

இலங்கை: சமரி அத்தபத்து (தலைவர்), ஹசினி பெரேரா, ஹன்சிமா கருணாரட்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, காவிஷா டில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, ஒஷாதி ரணசிங்க, ரஷ்மி சில்வா, இனோக்கா ரணவீர, அச்சினி குலசூரிய.

இந்தியா: ஷபாலி வர்மா, ஸ்ம்ரித்தி மந்தானா, யஸ்டிகா பாட்டியா, ஹார்மன்ப்ரீத் கொர் (தலைவர்), ஹார்லீன் டியோல், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ரேக்கர், ரேனுகா சிங், ராஜேஷ்வரி கயக்வாட், மெக்னா சிங்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனைவி­யரை உலகக் கிண்ண போட்டிக்கு அழைத்துச்செல்ல...

2022-10-07 10:13:59
news-image

பரபரப்பான போட்டியில் இந்தியாவை 9 ஓட்டங்களால்...

2022-10-07 09:52:33
news-image

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக நேபாள...

2022-10-06 19:06:10
news-image

17 வயது ரசிகை பாலியல் வன்கொடுமை...

2022-10-06 14:50:18
news-image

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்திற்கு...

2022-10-06 11:48:30
news-image

8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப்...

2022-10-06 11:16:02
news-image

இனி ஒருபோதும் கிரிக்கெட் விளையாட முடியாது-...

2022-10-05 17:23:59
news-image

ருசோவ் அபார சதம் : தென்னாபிரிக்காவுக்கு...

2022-10-05 09:19:09
news-image

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர்...

2022-10-04 21:17:20
news-image

இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல, குமார் தர்மசேன...

2022-10-04 16:01:06
news-image

மகளிர் இருபது 20 ஆசியக் கிண்ண...

2022-10-03 11:55:48
news-image

துடுப்பாட்டத்தில் மாலன், பந்துவீச்சில் வோக்ஸ் அசத்தல்...

2022-10-03 09:45:51