இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 257 ஓட்டங்களால் இந்திய அணி முன்னிலையில் !

By Digital Desk 5

04 Jul, 2022 | 10:33 AM
image

(என்.வீ.ஏ.)

இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஜொனி பெயார்ஸ்டோவ் 3 ஆவது தொடர்ச்சியான சதத்தைக் குவித்த போதிலும் பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டனில் நடைபெற்றுவரும் 5 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதமிருக்க 257 ஓட்டங்களால் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

Rishabh Pant goes big, England vs India, 5th Test, Birmingham, 3rd Day, July 3, 2022

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 85 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்த இங்கிலாந்துக்கு, 3ஆம் நாள் ஆட்டத்தின்போது ஜொனி பெயார்ஸ்டோவின் சதம் கைகொடுத்தது.

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் சதம் குவித்த பெயார்ஸ்டோவ், திறமையாகத் துடுப்பெடுத்தாடி 106 ஓட்டங்களைப் பெற்று 7ஆவதாக ஆட்டமிழந்தார்.

25 ஓட்டங்களைப் பெற்ற அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸுடன் 6ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்த ஜொனி பெயார்ஸ்டோவ், 7ஆவது விக்கெட்டில் சாம் பில்லிங்ஸுடன் மேலும் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டார்.

Cheteshwar Pujara raises his bat after reaching fifty, England vs India, 5th Test, Birmingham, 3rd Day, July 3, 2022

சாம் பில்லிங்ஸ் 36 ஓட்டங்களைப் பெற்றதுடன் பின்வரிசையில் மெத்யூ பொட்ஸ் 19 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 68 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 132 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த இந்தியா 2ஆவது இன்னிங்ஸில் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

சேத்தேஷ்வர் புஜாரா 50 ஓட்டங்களுடனும் முதல் இன்னிங்ஸில் சதம் குவித்த ரிஷப் பன்ட்   30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

Cheteshwar Pujara reaches out for the ball, England vs India, 5th Test, Birmingham, 3rd Day, July 3, 2022

விராத் கோஹ்லி 20 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

இந்தியா முதல் இன்னிங்ஸில் 416 ஓட்டங்களைக் குவித்தது.

போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனைவி­யரை உலகக் கிண்ண போட்டிக்கு அழைத்துச்செல்ல...

2022-10-07 10:13:59
news-image

பரபரப்பான போட்டியில் இந்தியாவை 9 ஓட்டங்களால்...

2022-10-07 09:52:33
news-image

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பாக நேபாள...

2022-10-06 19:06:10
news-image

17 வயது ரசிகை பாலியல் வன்கொடுமை...

2022-10-06 14:50:18
news-image

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்திற்கு...

2022-10-06 11:48:30
news-image

8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப்...

2022-10-06 11:16:02
news-image

இனி ஒருபோதும் கிரிக்கெட் விளையாட முடியாது-...

2022-10-05 17:23:59
news-image

ருசோவ் அபார சதம் : தென்னாபிரிக்காவுக்கு...

2022-10-05 09:19:09
news-image

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர்...

2022-10-04 21:17:20
news-image

இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல, குமார் தர்மசேன...

2022-10-04 16:01:06
news-image

மகளிர் இருபது 20 ஆசியக் கிண்ண...

2022-10-03 11:55:48
news-image

துடுப்பாட்டத்தில் மாலன், பந்துவீச்சில் வோக்ஸ் அசத்தல்...

2022-10-03 09:45:51